full screen background image

வேல்முருகன் பாடிய பாடலுக்கு சென்சாரில் தடை..!

வேல்முருகன் பாடிய பாடலுக்கு சென்சாரில் தடை..!

ஒரு படத்துக்கு எப்படியெல்லாம் விளம்பரம் தானா கிடைக்குது பாருங்க..!

குருசூர்யா மூவீஸ் தயாரிப்பில் R.K.அன்புச் செல்வன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம்  ‘என் நெஞ்சை தொட்டாயே’. சின்ன பட்ஜெட் படம். புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.

ENT-1 

இத்திரைப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அதில் மதுபானங்களின் பெயர்களை வைத்து ‘குடி குடி’ என துவங்கும் ஒரு பாடலும் இடம் பெற்றிருக்கிறது. இது டாஸ்மாக் பாரில் குடித்துவிட்டு பாடுவதைப் போல படமாக்கப்பட்டுள்ளதாம். ஜீவன் மயில் என்ற கவிஞர் எழுதியிருக்கிறார்.

“ஓல்டு மாங்கும், ஓட்காவும் உடம்புக்கு நல்லதுங்குறான்.. சிக்னேச்சர் டீச்சர்ஸ் சிந்தனைக்கு நல்லதுங்குறான்.. ஜானக்ஷாவும் நெப்போலியனும் நினைப்புக்கு நல்லதுங்குறான்..” என்று அந்த வரிகள் அமைந்திருந்தன. இந்தப் பாடலை பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் பாடியுள்ளார். நாகா-ஜீவன் மயில் இருவரும் இசையமைத்திருக்கிறார்கள். 

ENT-5 

படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, அந்த பாடலில் இருக்கும் மதுபான கம்பெனி பெயர்களுக்கு ஆட்சேபணை தெரிவித்து அந்த வரிகளை நீக்கும்படி சொல்லியுள்ளது. சர்டிபிகேட்டை வாங்கியாகணுமே..? மாட்டை வாங்கியாச்சு.. புல்லுக்கட்டு வாங்க யோசிக்கலாமா..? சட்டென்று அந்த வரிகளுக்கு மாற்று வரிகளை மண்டையை பிய்த்து, யோசித்து, அதை எழுதி, பாடலில் சேர்த்திருக்கிறார்கள்.

இப்போது தணிக்கைக் குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்து ‘யு’ சான்றிதழ் கொடுத்தாலும் ஒரு தடையை விதித்திருக்கிறார்கள்.

அதாகப்பட்டது என்னவெனில், இந்த ‘குடி குடி’ என்ற பாடல் காட்சியை தியேட்டர்களில் திரையிடலாம். ஆனால் டிவி சேனல்களில் ஒளிபரப்பவே கூடாது என்று ‘தடா’ விதித்துவிட்டார்களாம்..!

ஆக.. இது படத்துக்கு நேர்மறை விளம்பரமா..? அல்லது எதிர்மறை விளம்பரமா..? என்பது புரியாமல், நாங்களும் இங்கே அதனை விளம்பரமாகவே நினைத்தே பதிவிடுகிறோம்..!

Our Score