full screen background image

13 பேய்கள் செய்யும் கூட்டணி அட்டகாசம்தான் ‘வெள்ளிக்கிழமை 13-ம் தேதி’ திரைப்படம்..!

13 பேய்கள் செய்யும் கூட்டணி அட்டகாசம்தான் ‘வெள்ளிக்கிழமை 13-ம் தேதி’ திரைப்படம்..!

கோவிந்த் ஸ்டூடியோ சார்பில் விக்ரம் குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வெள்ளிக்கிழமை 13-ம் தேதி’.

தெலுங்கு நடிகை ஸ்ராவியா இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், ரத்தன் குமார், சுஜா குமார், ராம்ஜி, சித்ரா லட்சுமணன், எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், சாம்ஸ், வையாபுரி, ஷேவ்ராஜ், விஜயராஜ் கீர்த்தி, ஆர்.வினோத்குமார், ரேகா, நிரோஷா, மதுமிதா ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – கே.எஸ்.செல்வராஜ், இசை – தாஜ்நூர், படத்தொகுப்பு – ராஜ்கீர்த்தி, ‘13-ம் பக்கம் பார்க்க’ என்கிற வெற்றிப் படத்தை இயக்கிய இயக்குநர் புகழ்மணிதான் இந்தப் படத்தையும் இயக்குகிறார்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் புகழ்மணி, “சாத்தான்களுக்கு சந்தோஷத்தையும், சகல சக்தியையும் தரக் கூடிய நாள் வெள்ளிக்கிழமையும் 13-ம் தேதியும்தான் என்பது உலக மக்கள் அனைவரின் கணிப்பு.

அப்படியொரு திகில் நாளில் தன்னுடைய திருமணத்தை நடத்த திட்டமிடுகிறான் நாயகன். மணமேடையில் மணமகள் வேடத்தில்  ரத்த வெறி பிடித்த ஒரு பேயும் வந்து அமர்கிறது. இந்தத் திருமணத்தை நடத்தவிடாமல் தடுக்க 13 பேய்கள் அதே நாளில் கூட்டணி போட்டு தங்களது பேயாட்டத்தை ஆடுகின்றன.

பேய்களின் இந்த்த் தடுப்பாட்டத்திற்கு காரணம் என்ன..? நாயகன் தன்னுடைய திருமணத்திற்கு இந்தத் தேதியை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதற்கான காரணங்களெல்லாம் படத்தில் சுவையான திரைக்கதையாக வரவிருக்கிறது.

இந்தப் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் நிச்சயம் பெரும் பாராட்டைப் பெறும். படத்தின் கிளைமாக்ஸில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சிக்காக 150 அடி உயர அம்மன் சிலை பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. இந்தப் பாடல் காட்சி நிச்சயமாக ரசிகர்களை கவரும்..” என்றார்.

Our Score