full screen background image

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘வெள்ளை யானை’

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘வெள்ளை யானை’

இயக்குநர் சுப்ரமணியம் சிவா 2003-ல்  இயக்குநராக அறிமுகமானார். நடிகர் தனுஷை வைத்து அவர் இயக்கிய முதல் திரைப்படமான ‘திருடா திருடி’ சூப்பர் ஹிட் திரைப்படம். அதனை தொடர்ந்து ‘பொறி’, ‘யோகி’, ‘சீடன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் நடித்தும் உள்ளார். தற்போது இவர் நடிகர் மற்றும் இயக்குநரான  சமுத்திரக்கனியை  வைத்து  இயக்கியுள்ள படம் ‘வெள்ளை யானை’.

vellai yaanai movie stills

இந்த ‘வெள்ளை யானை’ திரைப்படத்தை ‘WHITE LAMP TALKIES’ தயாரிப்பு நிறுவனம்  சார்பில் தயாரிப்பாளர் S.வினோத் குமார்  தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மியா நடித்துள்ளார். ஆத்மியா தமிழில் ‘மனங்கொத்தி பறவை’ எனும் படத்தில் அறிமுகமாகியவர்.

முழுக்க, முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமான இந்த படத்தில் யோகிபாபு, E.ராமதாஸ், மூர்த்தி(இயக்குநர்), S.S.ஸ்டான்லி, பவா செல்லதுரை, ‘சாலை ஓரம்’ ராஜு, சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

314A0942

படத் தொகுப்பு – A.L.ரமேஷ், எழுத்து – இயக்கம் – சுப்ரமணியம் சிவா, தயாரிப்பு – S. வினோத்குமார், கலை இயக்கம் –  ஆ.ஜெகதீசன், ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி, சண்டைப் பயிற்சி – தினேஷ் சுப்பராயன், ஆடை வடிவமைப்பு – நாகு, ஒப்பனை – A.சரவணகுமார், B.ராஜா, விளம்பர வடிவமைப்புகள் – சசி & சசி, மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மது.

yogi babu

இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும்  உணவை சார்ந்து இருக்கிறது.  உணவு விவசாயத்தையும், விவசாயியையும் சார்ந்து இருக்கிறது. விவசாயம் நீரை சார்ந்துள்ளது. விவசாய வாழ்வின் அன்பையும், வியர்வையையும் ஏமாற்றத்தையும், கண்ணீரையும், கோபத்தையும் நையாண்டித்தனமாகவும், நகைச்சுவையாகவும் இயக்கியுள்ளார் இயக்குநர் சுப்ரமணியம் சிவா. 

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

Our Score