full screen background image

நல்ல மெஸேஜ் உள்ள படம் ‘வெள்ள காக்கா மஞ்ச குருவி’..!

நல்ல மெஸேஜ் உள்ள படம் ‘வெள்ள காக்கா மஞ்ச குருவி’..!

குரு ராகவேந்திரா மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எம்.குப்பன் தயாரிக்கும் படம் ‘வெள்ள காக்கா மஞ்ச குருவி.’

இந்தப் படத்தில் கார்த்திக்தாஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கத்தி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த அனு கிருஷ்ணா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் தென்னவன், மீராகிருஷ்ணா, சக்திவேல், சேஷு இவர்களுடன் முக்கிய வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு  –  பி.விஜய்  

இசை   –  G.சாய்தர்ஷன்   

கலை   –  சுந்தர்ராஜன்

எடிட்டிங்  –  ஆஸ்ட்ரோ ராயன்

நடனம்   –  எடிசன், ஜாய்மதி, சாய்கேசவ்

ஸ்டண்ட்   –  ஆறுபடை முருகன்

பாடல்கள்   –  எஸ்.கே.முரளிதரன், ஸ்ரீவிஜய், சதீஷ்காந்த்

தயாரிப்பு நிர்வாகம்   –  வெங்கட்   

தயாரிப்பு   –  N.சாய்பாபா, G.ஹரிபாபு, S.K.முரளீதரன், K.பிரசாத்

இணை தயாரிப்பு  –  பாஸ்மணிவண்ணன்

எழுத்து – இயக்கம் – S.K. முரளிதரன்.

படம் பற்றி இயக்குநர் எஸ்.கே.முரளிதரனிடம் பேசும்போது, “கிராமத்தில் படித்த ஒரு இளைஞன் வேலை வெட்டியில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறான். அப்படிப்பட்டவனுக்கு ஒரு பணக்கார பெண் மீது காதல் வருகிறது. அதனால் அவனது அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தால் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

பொறுப்பில்லாமல் இருந்த அவன் சமுதாயம் சம்மந்தப்பட்ட பிரச்னை ஒன்றை கையிலெடுத்து ஜெயிக்கிறான். ஊரே மெச்சுகிறது. அதன் பிறகு அவனது காதல் ஜெயித்ததா என்பதை கமர்ஷியலாக உருவாக்கியுள்ளோம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு  சென்னை, அரக்கோணம், சோளிங்கர், ஊட்டி, திருத்தணி, திருப்பதி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொன்ன திருப்தி இந்தப் படத்தினால் எங்களுக்கு ஏற்பட்டிருக்கு..” என்றார்.

Our Score