full screen background image

வீரத்திருவிழா – திரை முன்னோட்டம்

வீரத்திருவிழா – திரை முன்னோட்டம்

ஸ்ரீ செல்லாத்தாள் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக லெனின் –  செல்வகுமார் இணைந்துத் தயாரிக்கும் படம் ”வீரத் திருவிழா”.

இந்த படத்தில் புதுமுகம் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகம் தேனிகா நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், காதல் சுகுமார், பசங்க சிவகுமார், செந்தி, நஜீர், தமிழ் செல்வா, கலை, செல்வம், சிட்டு, சேட்டு பாலா, லெனின், ஆரவாயல் ராமன், கவிதா பாலாஜி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.விஜயமுரளிதர். இவர் இயக்குனர் வி.சேகரிடம் பதினாறு படங்களில் ‘வைரமணி’ என்ற பெயரில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குனர் கூறியது : “கிராமத்து மண்ணுக்கே உரிய வீரம், கலாச்சாராம், காதல், ஆத்மார்த்தமான நட்பு இதைத்தான் இதில் பதிவு செய்திருக்கிறேன். நகரத்து மக்களுக்கு எவ்வளவோ பொழுதுபோக்கு விஷயங்கள் இருக்கு. ஆனால், கிராமத்து மக்களுக்கு உள்ள பொழுதுபோக்கை இந்த படத்தின் திரைக்கதையாக்கி இருக்கிறோம். பக்கா கமர்ஷியல் படமாக ‘வீரத் திருவிழா’ உருவாகி உள்ளது…” என்றார்.

தயாரிப்பு   –   லெனின் செல்வகுமார்

இசை   –  ஈ.எஸ். ராம்தாஸ்

பாடல்கள்   –   சினேகன்,  ஆர்.எம்.இயற்கை அரசன்

ஒளிப்பதிவு  இயக்கம்  –   ஹார்முக்

கலை   –   முருகமணி

எடிட்டிங்    –   சதீஷ்குமார்

நடன இயக்கம்   –   எஸ்.எல்.பாலாஜி

ஸ்டண்ட்  இயக்கம்  –    ஆக்ஷன் பிரகாஷ்

எழுத்து, இயக்கம் – கே.விஜயமுரளிதர்

Our Score