‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வீர சிவாஜி’.
இந்த படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஷாமிலி நடிக்கிறார். மற்றும் ரோபோ சங்கர், ஜான்விஜய், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சுகுமார்
இசை – D.இமான்
எடிட்டிங் – ரூபன்
நடனம் – தினேஷ்
ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்
கலை – லால்குடி இளையராஜா
தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்
எழுத்து இயக்கம் – கணேஷ் விநாயக்
இந்த படத்தின் துவக்க விழா இன்று காலை புதுச்சேரியில் நடைபெற்றது. விழாவில் இளைய திலகம் பிரபு, திருமதி. புனிதா பிரபு, இயக்குனர் லஷ்மண் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்று பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.