1996-ல 45 லட்சம் ரூபா லாபம்-இயக்குநர் சொல்லும் கணக்கு..!

1996-ல 45 லட்சம் ரூபா லாபம்-இயக்குநர் சொல்லும் கணக்கு..!

பொதுவா சினிமா வட்டாரத்துல எத்தனை வயசுன்னு கேட்டால்கூட ஒரு பேச்சுக்கு சொல்லிவிடுவார்கள். ஆனால் “இந்தப் படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்குனீங்க..?” என்று கேட்டால் காது கேட்காதது போல் போய்விடுவார்கள்..  அப்படியிருக்கும் நிலைமையில், தான் சம்பாதித்த பண மதிப்பை அப்படியே வெளியில் சொன்னால் எப்படியிருக்கும்..?

எம்.ஜி.ஆரின் ‘புதிய பூமி’ படத்துக்கு கதை, வசனகர்த்தாவாக அறிமுகமானவர் வி.சி.குகநாதன். அதன் பின்பு இதுவரையில் 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். பல படங்களை இயக்கியிருக்கிறார். 

சமீபத்தில் நடந்த ‘மந்திரக்கன்னி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய குகநாதன் “இது போன்ற மந்திர, தந்திர பேய்க் கதைகளுக்கு எப்போதுமே மவுசு உண்டு.. ஏனென்றால் பெண்களுக்கு இது போன்ற கதைகள் ரொம்பப் பிடிக்கும். அவர்களை மையமாக வைத்தே இந்தக் கதைகள் எடுக்கப்படுவதால் அவர்களால் ரசிக்கப்பட்டு ஒரு காலத்தில் ஓஹோவென்று ஓடியது.. 

நான் 1996-ம் ஆண்டு வெங்கடேஷ், ஷில்பா ஷெட்டி நடித்த ஒரு தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்தேன். ‘கனவு்க் கன்னி’ என்று பெயர்..  இங்க இன்கம்டாக்ஸுக்கு தகவல் கொடுக்குறவங்க சொன்னாலும் எனக்கு பரவாயில்லை. வெளிப்படையா சொல்றேன். அந்த ஒரு படத்துல.. அந்தக் காலத்துல எனக்கு 45 லட்சம் ரூபா லாபம்.. இது ஒரு சரித்திர சாதனை.. ஒரு டப்பிங் படம் இந்த அளவுக்கு போய் ஜெயிச்சதுன்னா, அதுக்குக் காரணம் இது மாதிரியான ஒரு கதைதான்..” என்றார்.

நம்ம இயக்குநர் ஸாருக்கு.. 1996 கணக்கையெல்லாம் இனிமே இன்கம்டாக்ஸ்காரங்க தோண்ட மாட்டாங்கன்ற நம்பிக்கை போல..! ஆனாலும் வெளிப்படையா, தைரியமா சொன்னாரே.. அதுக்கொரு ஷொட்டு..! 

Our Score