full screen background image

வருசநாடு – திரை முன்னோட்டம்

வருசநாடு – திரை முன்னோட்டம்

ஆகாஷ் அர்ஜுன் பிக்சர்ஸ், ஸ்ரீமாயி பிலிம்ஸ், ஆர்,கருப்பையா பிரதர்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘வருசநாடு’.

இந்த படத்தில் குமரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் சிங்கமுத்து, மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, ராஜ்கபூர், சந்தானபாரதி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –  T.பாஸ்கர்

பாடல்கள்   –  அண்ணாமலை, வால்மீகி, கவிகார்க்கோ, தமிழமுதன்.

இசை   –  யதீஷ் மகாதேவ்

கலை   –  எம்.ஜி.சேகர்

ஸ்டண்ட்   –  கனல்கண்ணன்

நடனம்  –  அசோக்ராஜா, பாபி, ரமேஷ்ரெட்டி

எடிட்டிங்  –  தியாகராஜன்

நிர்வாக தயாரிப்பு  –   ஆர்.ராமனுஜம்

தயாரிப்பு மேற்பார்வை –  ஜெயகுமார்

தயாரிப்பு  –  ரோசன், ஆர்.செந்தில்குமார்.

திரைக்கதை, வசனம், இயக்கம் – சூர்யபிரகாஷ். (இவர் சரத்குமார் நடித்த ‘மாயி’ உட்பட பல படங்களை இயக்கியவர்.)

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்….

“ராமேஸ்வரம் பகுதியில் நடக்கும் கதை இது..! எவ்வளவோ சோகங்களை சுமந்து கொண்டிருக்கும் சோக பூமியான ராமேஸ்வரத்தில் சுகமான தனது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்த ஒரு காதல் ஜோடியின் காதல் கதைதான் ‘வருசநாடு.’ சுகமும் –  சோகமும் கலந்துதான் காதல்..! இதைத்தான் கதைக் கருவாக கொண்டிருக்கிறோம்..!

இதில் அடிதடி, ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்து படமாக்கி இருக்கிறோம். ‘மாயி’ படம் எப்படி எனக்கு ஒரு திருப்பு முனையைத் தந்ததோ, அது மாதிரியே இந்த ‘வருசநாடு’ம் எனக்கு நல்லதொரு எதிர்காலத்தைத் தரும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு..” என்கிறார் சூர்யபிரகாஷ்.

Our Score