full screen background image

நட்பைப் பாராட்டும் விஜய் சேதுபதியின் ‘வன்மம்’..!

நட்பைப் பாராட்டும் விஜய் சேதுபதியின் ‘வன்மம்’..!

வரும் 21-ம் தேதி விஜய் சேதுபதியின் ‘வன்மம்’ திரைக்கு வரவிருக்கிறது. இதில் இவர் மட்டுமே நாயகன் இல்லை. கிருஷ்ணாவுடன் உடன் இருக்கிறார். சுனைனா ஹீரோயின். ஆனால் இவர் கிருஷ்ணாவுக்குத்தான் ஜோடியாம். அப்போ விஜய் சேதுபதிக்கு..? ‘யாருமில்லை’ என்கிறார் இயக்குநர் ஜெய்கிருஷ்ணா..

சிவகார்த்திகேயனுக்கு அடுத்து முதல் ஷோவிலேயே கல்லா பெட்டியை நிரப்பும் அக்மார்க் நம்பிக்கையுள்ள ஹீரோவான விஜய் சேதுபதி தான் நடிக்கும் படத்தை மிக, மிக கவனமாகத் தேர்வு செய்து வருகிறார். ‘வித்தியாசமான கதைதான் தனக்குத் தேவை.. நாயகனாக தன்னுடைய வளர்ச்சி தேவையில்லை’ என்கிறார். அப்படி கதைத் தேர்வில் வந்ததுதான் இந்த ‘வன்மம்’ படம்.

இரண்டு நண்பர்களுக்குள் இடையில் ஏற்பட்ட ஒரு சின்ன ஈகோ பிராப்ளத்துனால அது அவங்க லைப்ல எப்படி பாதிக்குது என்பதுதான் கதைக்கரு.

“இரண்டு பேரும் அப்படியொரு குளோஸ் பிரெண்ட்ஸ்.. என்ன இருந்தாலும்.. எத்தனை பெரிய நட்பாக இருந்தாலும்.. அவர்களுக்கிடையில் கண்ணுக்குத் தெரியாத ஒரு எல்லைக் கோடு இருக்கும். அதை ஒருத்தரையொருத்தர் தாண்டிட்டா அந்த நட்புக்கே பங்கம் வர்ற மாதிரி பிரச்சினைகள் வரும். அப்படியொரு சூழல் விஜய்சேதுபதிக்கும், கிருஷ்ணாவுக்கும் இடைல வருது. இருவரில் ஒருவர் ஒரு வார்த்தையைவிட அதுவே பிரச்சினையாகிறது.. அப்பக்கூட ‘இவன் என்னை பார்த்து இப்படி சொல்லலாமா?’ என்று ஒரு ஆற்றாமையால் அவர்களுக்குள் வன்ம்ம் வளர்ந்து கொண்டே போகிறது.. இது எப்படி கடைசியில் முடிகிறது..” என்பதுதான் படத்தின் கதை என்கிறார் இயக்குநர்.

படத்துல விஜய் சேதுபதி காதல் விஷயத்துல அமைதின்னா.. கிருஷ்ணா ஒரு லவ்வர் பாயா வர்றாராம். “இருவருக்குமே சம்மான கேரக்டர்களே கொடுத்திருப்பதால் அவர்களுக்கிடையில் எந்தப் பிரச்சினையும் வரவில்லை.. எல்லாமே ஸ்மூத்தா முடிஞ்சிருச்சு…” என்று சந்தோஷப்படுகிறார் இயக்குநர்.

பாலபரணி ஒளிப்பதிவு செய்ய.. எஸ்.எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்திருக்கிறார். இந்தப் படம் முழுக்க, முழுக்க நாகர்கோவில், கன்னியாகுமரிப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் பகுதியின் வட்டார வழக்கில்தான் கேரக்டர்கள் அனைவரும் வசனம் பேசியிருக்கிறார்கள்.

DSC_8953

“சுனைனா எப்படி..?” என்றால்.. “ரெண்டு நிமிஷம்தான் ஸார் வரும், ஆத்துல குளிக்குற சீனு.. அதுல நடிம்மான்னா முதல்ல முடியாதுன்னு சொல்லியிருச்சு.. அப்புறம் அந்தப் பக்கம் லேடீஸெல்லாம் எப்படி குளிப்பாங்கன்றதை எடுத்துச் சொல்லி.. இது கவர்ச்சிக்காக இல்லை.. கதைக்காக அவசியம் தேவைப்படுதுன்னு வற்புறுத்தி அதுல நடிக்க வைச்சோம்..” என்று சொல்லி பெருமூச்சுவிட்டார் இயக்குநர்.

சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் வேணும்னா சில காட்சிகளை நீக்க வேண்டும் என்றார்களாம். அவர்கள் நீக்கச் சொன்னதெல்லாம் ‘வன்மம்’ படத்தின் ஸ்பெஷல் காட்சிகள் என்பதால் வேண்டாம் என்று மறுத்து ‘யு/ஏ’வை வாங்கிக் கொண்டார்களாம்..!

ரொம்ப தில்லுதான்..!

Our Score