full screen background image

கேங்க்ஸ்டர் கும்பல் பற்றிய படம் ‘வஞ்சகர் உலகம்’..!

கேங்க்ஸ்டர் கும்பல் பற்றிய படம் ‘வஞ்சகர் உலகம்’..!

சமீப காலமாக பல படங்கள் ‘திரில்லர்’ வகையில் வெளிவந்திருந்தாலும் ஒரு சில படங்களே சினிமா ரசிகர்களுக்கு நிஜமான த்ரில்லை தந்துள்ளன.

புதுமுக இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியிருக்கும் காதல் திரில்லர் படமான ‘வஞ்சகர் உலகம்’ அந்த திரில்லை கொடுக்க இருக்கிறது.

இந்தப் படத்தை தயாரிப்பாளர் மஞ்சுளா பீதா தயாரித்துள்ளார். புதுமுகம் சிபி கதாநாயகனாகவும், அனிஷா அம்ப்ரோஸ் மற்றும்  சாந்தினி தமிழரசன் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர்.

மற்றும் குரு சோமசுந்தரம், விசாகன், அழகம் பெருமாள், ஜான் விஜய், ஹரிஸ் பெரடி, ரவீந்தர், வாசு விக்ரம், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, ‘சிசர்’ மனோகர், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ராட்ரிகோ, இசை – சாம் C.S., படத் தொகுப்பு – ஆண்டனி, கலை இயக்கம் – A.ராஜேஷ், சண்டை இயக்கம் – ஸ்டன்னர் ஷாம், உடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா, உடைகள், எம்.முகமது சுபீர், ஒப்பனை – சி.ஹெச்.வேணு, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ஒலி கலப்பு – டி.உதயகுமார், ஸ்டில்ஸ் – முத்துவேல், தயாரிப்பு வடிவமைப்பு – கபிலன், தயாரிப்பு ஆலோசனை – ஜே.கே.பிரசன்னா, தயாரிப்பு நிர்வாகம் – கே.மணிவர்மா, இணை இயக்கம் – ரமேஷ் மரபு, வசனம் – வி.விநாயக், தயாரிப்பு – பி.வி.மஞ்சுளா, கதை, திரைக்கதை, இயக்கம் – மனோஜ் பீதா.

4

இவர் இயக்குநர் S.P.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பல புதுமுக நடிகர்களோடு, சில அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்துள்ளனர்.

‘வஞ்சகர் உலகம்’ திரைப்படம் குறித்து இயக்குநர் மனோஜ் பீதா பேசுகையில், “இது ஒரு கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் திரில்லர் படம். இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த  எனது நண்பர் விநாயக்தான் இப்படத்தின் கதையாசிரியர்.

‘வஞ்சகர் உலகம்’ படத்தின் கதை மற்றும் திரைக்கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும்  ஒரு புது அனுபவமாக நிச்சயம் இருக்கும். எனக்கு மிகவும் திருப்தியும் சந்தோஷமும் அளிக்கும் வகையில் இப்படம் வந்துள்ளது.

1

படத்தின் ஒவ்வொரு நடிகரும் அசத்தியுள்ளனர். குறிப்பாக குரு சோமசுந்தரத்தின் நடிப்பாற்றலை கண்டு வியந்தேன். ஒரு கேங்ஸ்டர் வேடத்தில் அவர்  இப்படத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியையும் அவர் கையாண்டு அசத்தியவிதம் நான் அவரிடம் எதிர்பார்த்ததைவிட பல மடங்கு பிரமாதமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட 5-6 நிமிடங்ககள்ட்சி வரும் காட்சியில் ஒரே டேக்கில் ஓகே செய்து  எல்லோரையும் மிரள வைத்தார் அவர். அவரது அபார  நடிப்பாற்றலால், கதையில் நாங்கள் சில மாறுதல்களை செய்ய வேண்டியிருந்தது.

நடிகர் விசாகன் வணங்காமுடியின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் இப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக நிச்சயமாக இருக்கும். 

மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ராட்ரிகோதான்  இப்படத்தில் ஒளிப்பதிவாளர். அவரது சிறந்த ஒளிப்பதிவு, நிச்சயம் தமிழ் சினிமா உலகில் பேசப்படும்.

படத்தின் Post Production பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்..” என்றார்.

Our Score