பொதுவாக பழைய படங்களின் பெயர்களில் மீண்டும் படமெடுத்தால் முதலில் முறைப்படி அனுமதி வாங்கித்தான் பூஜையே போடுவார்கள். இங்கே அப்படியே உல்டாவாகி படம் எடு்த்து முடிக்கும்வரையிலும் பழைய படத்தின் டைட்டிலுக்கு அனுமதியே வாங்கவில்லை என்னும் புகார் எழுந்துள்ளது.
அரவிந்த்சாமியின் நடிப்பில் இயக்குநர் செல்வாவின் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வணங்காமுடி’ படம்தான் அந்தப் படம்.
இதே ‘வணங்காமுடி’ என்ற தலைப்பில் ஏற்கனவே கடந்த 1957-ம் ஆண்டில் ஒரு திரைப்படம் வெளியாகி உள்ளது. அந்தப் படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி, நம்பியார் உள்ளிட்டோர் நடித்திருந்திருந்தனர். இப்படத்தை தயாரிப்பாளர் ஏ.கே.பாலசுப்ரமணியம் தயாரித்திருந்தார்.
இந்நிலையில், முறையான அனுமதி பெறாமல் தன்னுடைய தந்தை தயாரித்த படத்தின் தலைப்பை அரவிந்த் சாமி நடித்துள்ள படத்துக்கு பயன்படுத்தி இருப்பதாகவும், இதற்காக சட்டப் போராட்டம் நடத்த தான் தயாராக இருப்பதாகவும் ஏ.கே.பாலசுப்ரமணியத்தின் மகன் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.
நேற்றுதான் ‘வெந்து தணிந்த காடு’ படத்தின் டைட்டில் பிரச்சினை எழுந்தது. இன்றைக்கு இந்தப் படம். நாளைக்கு என்ன படமோ..?