full screen background image

‘வணங்கான்’ படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி..!

‘வணங்கான்’ படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி..!

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்  தயாரிப்பில், பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வணங்கான்’. அருண்விஜய் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். நாயகி ரித்தா மற்றொரு நாயகியாக நடித்தூள்ளார்.  முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், ராதாரவி, ஜான் விஜய், ரவிமரியா, சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

வரும் பொங்கல் பண்டிகை வெளியீடாக வரும் ஜன-10 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ‘வணங்கான்’ திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது. பொங்கல் வெளியீட்டு பட்டியலில் எந்தெந்த படங்கள் இடம்பிடிக்க இருக்கின்றன என்கிற அறிவிப்புகள் எதுவும் இதுவரை உறுதியாகாத நிலையில் ‘வணங்கான்’ படத்தின் ரிலீஸ் முதல் அறிவிப்பாக வெளியாகி உள்ளது குறிப்படத்தக்கது.

அதற்கு கட்டியம் கூறும் விதமாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தபடத்தில் இருந்து அருண் விஜய் ஒரு கையில் பெரியார் சிலையும், ஒரு கையில் விநாயகர் சிலையையும் எடுத்து வரும் சில நொடிக் காட்சிகளையும் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க பின்னணி இசையை சாம் சி.எஸ் அமைத்துள்ளார்.. பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்ள படத்தொகுப்பை சதீஷ் சூர்யா கவனிக்கிறார். கலை இயக்குநராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார். ஆக்சன் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார்.

‘மாநாடு’ என்கிற பிளாக் பஸ்டர் வெற்றிப் படத்தை தொடர்ந்து வி ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் என்பதுடன், இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் ஆறு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதாலும் இந்தப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

 

Our Score