நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வள்ளி மயில்’.
இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, பரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, சத்யராஜ், ‘புஷ்பா’ படப் புகழ் சுனில், G.P.முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
எழுத்து, இயக்கம் – சுசீந்திரன், இசை – டி இமான், ஒளிப்பதிவு – விஜய் சக்ரவர்த்தி, படத் தொகுப்பு – ஆண்டனி, கலை இயக்கம் – உதயகுமார், சண்டை பயிற்சி இயக்கம் – மாஸ்டர் ராஜசேகர், பத்திரிகை தொடர்பு – சதீஷ் AIM ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.
1980-களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான டிராமா திரில்லராக இந்த ‘வள்ளி மயில்’ படம் உருவாகிறது.
1980-ம் ஆண்டு காலத்திய கதை என்பதால் திண்டுக்கல் மாநகரில் அந்தக் காலக்கட்டத்தின் பின்னணியை கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சி, தற்போது திண்டுக்கல் அருகேயிருக்கும் சிறுமலை காட்டினுள் பிரம்மாண்டமான செலவில் அமைக்கப்பட்டிருக்கும் கோவில் அரங்கில் படமாக்கப்பட்டு வருகிறது.
மும்பையை சேர்ந்த 50 ஸ்டண்ட் கலைஞர்களுடன் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் நாயகி பரியா அப்துல்லா இருவரும் இந்த சண்டைக் காட்சியில் பங்கு கொண்டு நடித்து வருகின்றனர்.
படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.









