மற்றைய ஹீரோக்களை போலவே இயக்குநர் சுந்தர்.சி.யும் தனது நடிப்புப் பணியைக் கைவிடாமல் தொடர்ச்சியாக கிடைத்த படங்களில் நடித்து வருகிறார்.
சுந்தர்.சி.யின் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படம் ‘வல்லான்’.
இந்தப் படத்தை V.R.டெல்லா பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் V.R.மணிகண்டராமன் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் சுந்தர் சி.யுடன் ஹெபா படேல், தான்யா ஹோப், சாந்தினி தமிழரசன் ஆகிய மூன்று ஹீரோயின்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
மேலும் அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், அஜித் கோஷி ஆகியோரும் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – மணி பெருமாள், இசை – சந்தோஷ் தயாநிதி, கலை இயக்கம் – சக்தி வெங்கட்ராஜ், எக்ஸிகியூடிவ் புரொட்யூசர் – அசோக் சேகர், நடன இயக்கம் – கல்யாண், சந்தோஷ், சண்டை இயக்கம் – விக்கி நந்தகோபால், புகைப்படங்கள் – ராஜேந்திரன், மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM), எழுத்து, இயக்கம் – மணி சேயோன்.
இந்த ‘வல்லான்’ படத்தின் டீசர் இன்றைக்கு வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.