‘வட சென்னை’ திரைப்படம்  அக்டோபர் 17-ல் வெளியாகிறது..!

‘வட சென்னை’ திரைப்படம்  அக்டோபர் 17-ல் வெளியாகிறது..!

‘விசாரணை’ படத்திற்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வந்த  படம் 'வட சென்னை'. சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் தனுஷ் ‘அன்பு’ என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார். தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது.

இந்தக் கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தப் படத்தினை லைகா ப்ரொடக்சன் நிறுவனம் வரும் அக்டோபர் 17-ம் தேதி வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார்.