full screen background image

‘வாரிசு’ தெலுங்கு ரிலீஸ் தள்ளிப் போகிறது..!

‘வாரிசு’ தெலுங்கு ரிலீஸ் தள்ளிப் போகிறது..!

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மட்டும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. தெலுங்கில் ‘வரசுடு'(Varasudu) என்ற பெயரில் இந்த படம் வெளியாகிறது.

தமிழில் ஜனவரி 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தெலுங்கு பதிப்பான ‘வரசுடு’ 3 நாட்கள் கழித்துதான் வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.

தெலுங்கு வரசுடு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை ஹைதராபாத்தில் நடந்தது.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் ‘வாரிசு’ – ‘வரசுடு’ படத்தின் தயாரிப்பாளரான தில்ராஜ் பேசும்போது, “வாரிசு’ படம் தமிழில் சொன்ன தேதியில் 11-ம் தேதி வெளியாகும். ஆனால் ‘வாரிசு’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வரசூடு’ தள்ளிப் போகிறது. ஜனவரி 14-ம் தேதிதான் தெலுங்கு பதிப்பு வெளியாகும்.

எங்கள் தெலுங்கு நட்சத்திரங்கள் பாலகிருஷ்ணாவின் ‘வீரசிம்ம ரெட்டி’ & சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ ஆகிய இரண்டு படங்கள் ஜனவரி 12 & 13 தேதிகளில் வெளியாகிறது. எனவே ‘வரசுடு’ ரிலீஸ் தள்ளிப் போகிறது” என்றார் தில் ராஜூ.

Our Score