வடசென்னையின் குத்துச் சண்டை போட்டி பற்றிய கதைதான் ‘வாண்டு’ திரைப்படம்

வடசென்னையின் குத்துச் சண்டை போட்டி பற்றிய கதைதான் ‘வாண்டு’ திரைப்படம்

எம்.எம். பவர் சினிமா கிரியேஷன்ஸ் சார்பில் வாசன் ஷாஜி தயாரித்துள்ள திரைப்படம் ‘வாண்டு’.

இந்தப் படத்தில் சீனு நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். ஷிகா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ‘தடையற தாக்க’ மற்றும் ‘கொம்பன்’ புகழ் மஹா காந்தி, ‘மெட்ராஸ்’ புகழ் ரமா,  ‘தெறி’ சாய் தீனா, ‘ரோமியோ ஜூலியட்’ புவனேஸ்வரி, ரவிசங்கர், ராமச்சந்திரன், முருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – A.R.நேசன், பாடல்கள் – மோகன் ராஜன், கலை – J.P.K.பிரேம், ஒளிப்பதிவு -ரமேஷ் & V.மஹேந்திரன், படத் தொகுப்பு – ப்ரியன்,  நடனம் – பாபி அன்டனி, சண்டை பயிற்சி – ஓம் பிரகாஷ், இணை தயாரிப்பு – டத்தோ N. முனியாண்டி. தயாரிப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வாசன் ஷாஜி. 

இயக்குனர் வாசன் ஷாஜி, இயக்குநர் செல்வராகவன் மற்றும் சில முன்னனி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பனியாற்றியுள்ளார்.

jpg (36)

இந்த ‘வாண்டு’ திரைப்படம் 1970 -1971களில் வடசென்னையில் நடந்த Street Fight-ல்  நடந்த உண்மை சம்பவத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை.

ஹீரோவின் அப்பாவான முருகனும்,  வில்லனின் அப்பாவான மஹா காந்தியும் ஒருத்தரை ஒருத்தர் மோதி கொள்ளும் Kick boxing போட்டியில் மோதுகிறார். இந்தப் போட்டியில் ஹீரோவின் அப்பா முருகன் வில்லனின் அப்பாவான மஹாகாந்தியால் கடுமையாகத் தாக்கப்படுகிறார். இதனால் அவரது  மனநலம் பாதிக்கப்பட்டு மனநோயாளியாகிறார்.

ஐந்து வருடங்கள் கழித்து வில்லன் மஹா காந்தியின் மகன் பயிற்சி பெறும் Kick boxing பள்ளியில் ஹீரோவும் சேர்கிறார் பயிற்சியில் இவர்களுக்குள் விரோதம் ஏற்படுகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத வில்லன் மஹா காந்தி ஹீரோவுக்கு இடையூறு செய்கிறார்.

இந்த விஷயம் இரண்டாவது ஹீரோவான Kick boxing மாஸ்டருக்கு தெரியவருகிறது. இதனால் மாஸ்டர், ஹீரோவிற்கு அதிக பயிற்சி கொடுக்கிறார். இதனால் தைரியமாகும் ஹீரோ வில்லன் மஹா காந்தி பையனுடன் Street Fight-க்கு வருகிறார்.  இந்த சண்டையின் விளைவு என்ன என்பதுதான் இந்தப் படத்தின் கதையாம்.

Our Score