பாஸ்ட் டிராக் ஐ சென்ஸ் வழங்க மகாலஷ்மி மூவீஸ் கே.எஸ்.மதுபாலா தயாரிக்கும் படம் ‘வானவராயன் வல்லவராயன்’ இதில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக மோனல் கஜார் நடிக்கிறார்.
மற்றும் சந்தானம், சௌகார் ஜானகி, கோவைசரளா, ஜெயபிரகாஷ், தம்பி ராமய்யா, எஸ்.பி.பி.சரண், சி.ரங்கநாதன், மீரா கிருஷ்ணன், பாவா லட்சுமணன், பிரியா, கிருஷ்ணமூர்த்தி, ஷண்முகசுந்தரம், கொட்டாச்சி, லொள்ளுசபா மனோகர் ஆகியோர் நடிக்கிறார்கள். சென்னை நகரெங்கம் வியாபித்திருக்கும் FAST TRACK தனியார் வாடகை கார் நிறுவனத்தின் உரிமையாளர் மதுபாலாதான் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ராஜமோகனிடம் கேட்டபோது, “இது ஜாலியான அண்ணன், தம்பிகளைப் பற்றிய படம். இரண்டரை மணி நேரத்திற்கு நான் ஸ்டாப்பாக சிரிக்க வைக்கிற படமாக இருக்கும். ஒரு நிமிடம்கூட பிரியாமல் இருக்கும் அண்ணனும், தம்பியும் ஐந்து நிமிடம் சேர்ந்திருந்தால் அடுத்த பத்து நிமிடங்களுக்கு சண்டை போட்டுக் கொள்வார்கள். அண்ணனுக்கு முப்பது முறை காதல் தோல்வி. 31-வது முறை ஒரு காதல் மலர்கிறது. அந்த காதல் ஜெயித்ததா? இல்லை தம்பியின் பாசம் ஜெயித்ததா…? என்று ஜாலியான கதையாக வானவராயன் வல்லவராயன் உருவாகி இருக்கிறது.
ஹீரோயின் மோனல் கஜாரின் அழகும், இளமையும் படத்திற்கு இன்னொரு சிறப்பம்சம். யுவன் சங்கர் ராஜாவின் இசை ‘கழுகு’ படத்திற்கு எவ்வளவு பலம் சேர்த்ததோ அதைவிட இதற்கு அதிகம் சேர்க்கும். சௌகார் ஜானகியை எல்லோருக்கும் மிடுக்கான கதாபாத்திரத்தில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இதில் முழுக்க முழுக்க காமெடியில் கலக்கி இருக்கிறார்.. என்றார் ராஜமோகன்.
ஒளிப்பதிவு – பழனிகுமார்.
பாடல்கள் – சினேகன்
நடனம் – தினேஷ், ராபர்ட்
எடிட்டிங் – கிஷோர்
கலை – ரெமியன்
ஸ்டண்ட் – T.ரமேஷ்
தயாரிப்பு – கே. எஸ். மதுபாலா
கதை , திரைக்கதை, வசனம், இயக்கம் – ராஜமோகன்