full screen background image

‘வாழ்க விவசாயி’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் இயக்குநர் சசிகுமார்

‘வாழ்க விவசாயி’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் இயக்குநர் சசிகுமார்

நீரின்றி, உணவின்றி, தொழில்  இல்லாததால் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தவிக்கும் விவசாயிகள் பிரச்சினையை மையப் பின்னணியாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘வாழ்க விவசாயி’.

இந்தப் படத்தை  கதிர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில்  தயாரிப்பாளர் ‘பால் டிப்போ’ கதிரேசன் தயாரித்துள்ளார். 

இப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, வசுந்தரா, முத்துராமன், ‘ஹலோ’ கந்தசாமி, ஸ்ரீகல்கி, ‘மதுரை’ சரோஜா அம்மாள், திலீபன், குழந்தை நட்சத்திரங்கள் வினோத், சந்தியா, ஆனந்த ரூபிணி, கவிஞர் விக்கிரமாதித்யன், விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு – கே.பி.இரதன் சந்தாவத், இசை – ஜெயகிருஷ், பாடல்கள் – யுகபாரதி, தமிழ்மணி அமுதன், மோகன் ராஜன், படத் தொகுப்பு – பா.பிரவின் பாஸ்கர். கலை இயக்கம் – ஆர். சரவண அபிராமன். நடனம் – காதல் கந்தாஸ், புதுமுக இயக்குநரான பி.எல்.பொன்னி மோகன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

vivasaye - 16x25 cm

படம் பற்றி இயக்குநர் பொன்னி மோகன் பேசும்போது, “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார்களின் கதை இது. சமீப காலமாக இந்தியாவில் விவசாயிகள் படும் துன்பத்தையும், துயரத்தையும், அவலத்தையும் இத்திரைப்படம் படம் பிடித்துக் காட்டுகிறது..” என்கிறார். 

விவசாயத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த ‘வாழ்க விவசாயி’ படத்தின்  பர்ஸ்ட் லுக்கை நடிகரும், இயக்குநருமான சசிகுமார் வெளியிட்டார்.

அப்போது இந்தப் படத்தின் அறிமுகத்தைத் தான் செய்வதில் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகக் கூறிய அவர், ‘வாழ்க விவசாயி’ படக் குழுவினரையும் பாராட்டினார்.  

நாட்டில் இன்று  பற்றி எரியும் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி எடுக்கப்பட்டுள்ள  இந்த ‘வாழ்க விவசாயி’ படத்தை இயக்குநர்  சசிகுமார் ஊக்கப்படுத்திப் பாராட்டியதில் புது மகிழ்ச்சியில் பூரிக்கிறது படக் குழு.

படத்தின் படப்பிடிப்பு  இராஜபாளையம், சொக்கம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார விவசாய  கிராமங்களில் நடைபெற்றுள்ளது.

தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Our Score