full screen background image

வாயை மூடி பேசவும் – திரை முன்னோட்டம்

வாயை மூடி பேசவும் – திரை முன்னோட்டம்

பனிமலை என்னும் மலைப் பிரதேசத்தில் உள்ள ஒரு ஊரில் ஊமை காய்ச்சல் என்னும் நோய் பரவுகின்றது. அதனால் அந்த ஊரில் வசிக்கும் மக்கள் தங்கள் குரலை இழக்கின்றனர். உலகில் உள்ள எல்லா பிரச்சினைகளையும் பேசினால்தான் தீர்க்க முடியும் என நம்புபவன் அரவிந்த்(துல்கர் சல்மான்). பேசுவதென்றால் அறவே பிடிக்காதவள் அஞ்சனா(நஸ்ரியா). இந்த ஊமை காய்ச்சலால் இவர்கள் இருவரின் வாழ்க்கை முற்றிலுமாக மாறுகிறது.

இப்படத்தின் மையக்கரு, இன்றைய தேதியில் மக்கள் யாரும் சரியான முறையில் பேசுவதில்லை, கருத்துகளை சரியாக பரிமாறி கொள்வதில்லை என்ற காரணத்தால் உண்டாகும் தனி நபர் பிரச்சனைகள், சமூகப் பிரச்சனைகள் மற்றும் அதன் விளைவுகளும்தான். இதை போல பனி மலை ஊரில், தெளிவற்ற பேச்சினால் வரும் பிரச்சனைகளை கொண்ட சில கதாபாத்திரங்களின் கதைகளும் இத்திரைப்படத்தினுள் இருக்கிறது.

• ‘காதலில் சொதப்புவது எப்படி’ வெற்றிப் படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம்தான் இந்த ‘வாயை மூடி பேசவும்’.

• இப்படத்தை புதிய நிறுவனமான Radiance Media வருண் மணியன் மற்றும் Ynot சஷிகாந்த் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

• இயக்குனர் பாலாஜி மோகன் “காதலில் சொதப்புவது எப்படி” படத்திற்கு பிறகு மீண்டும் YNOT studios உடன் இணைத்துள்ளார்.

• மலையாள Megastar மம்மூட்டியின் மகன் Dulquer Salmaan தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது.

• துல்கர் சல்மான் இப்படத்தில் சேல்ஸ் மேனாக நடித்துள்ளார்

• துல்கர், நஸ்ரியாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

• நஸ்ரியா டாக்டராக நடித்துள்ளார்.

• நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை மதுபாலா இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இருவர் படத்திற்கு பிறகு மதுபாலா நடிக்கும் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

• இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

• துல்கர் சல்மான், நஸ்ரியா இருவரும் தாங்களே தமிழில் டப்பிங் பேசியுள்ளனர்.

• நடிகர் பாண்டியராஜன் இப்படத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக நடித்துள்ளார்.

• இப்படத்தில் வினுச்சகரவர்த்தி, ரோபோ ஷங்கர்,  ஜான் விஜய், சத்யப்பிரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், காளி வெங்கட், RJ பாலாஜி, அபிஷேக், கமலி, இவர்களுடன் படத்தின் இயக்குனர் பாலாஜி மோகனும் நடித்துள்ளனர்.

• இயக்குனர் பாலாஜிமோகன் தனியார் டிவியின் செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளார்.

• இப்படத்திற்கு ‘மாற்றான்’ புகழ் சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

• மோகன் கலையையும், படத் தொகுப்பை அறிமுக படத்தொகுப்பாளர் அபிநவ் சுந்தர்நாயக்கும் செய்துள்ளனர்.

• Sean Roldan இசையமைத்துள்ளார்.

• Sean Roldan-க்கு ‘வாயை மூடி பேசவும்’ முதல் படம்.

• படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் மற்றும் மூன்று 3 theme music tracks இடம் பெற்றுள்ளது.

• மதன் கார்க்கி இரண்டு பாடல்களும், முத்தமிழ் இரண்டு பாடல்களும் பாலாஜி மோகன் ஒரு பாடலும் எழுதியுள்ளனர்.

• இசையமைப்பாளர் sean Roldan மற்றும் இயக்குனர் பாலாஜி மோகன் இனைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர்.

• இப்படத்தின் பாடல் Mastering சிட்னியில் நடைபெற்றது.

• Lady Gaga, Rihaana, Shakira போன்றவர்களின் பாடல்களை mastering செய்த Leon Zervos இப்படத்தின் பாடல்களுக்கு mastering செய்துள்ளார்.

• சக்தி ஸ்ரீ கோபாலன், ஹரிசரண், ஆலாப் ராஜு, கல்யாணி நாயர், போன்ற முன்ணணி பாடகர்கள் பாடல்களை பாடியுள்ளனர்.

• இப்படத்தின் ஒலிப்பதிவு Auro 3d தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

• படத்தின் ஆடியோ உரிமையை Think music வாங்கியுள்ளது.

• இப்படம் முழுவதுமாக மூணாரில் படமாக்கப்பட்டுள்ளது.

• ஒரே schedule-லில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

• தொடர்ந்து 55 நாள்களில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது.

• இப்படத்தின் கதை பனிமலை என்னும் கற்பனை மலைப்பிரதேசத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

• மூணாரில் இதுவரை யாரும் கண்டறியாத புது இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

• தென்னிந்தியாவின் இரண்டாவது பெரிய சிகரமான மீசைபுலி மலையில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

• இப்போது படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் Post Production பணி வேகமாக நடந்து வருகின்றது.

• இந்த கோடை விடுமுறைக்கு படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Our Score