full screen background image

அஸ்வின் குமார், அஞ்சு குரியன் நடித்திருக்கும் ‘வாடி வாடி’ மியூஸிக் ஆல்பம்

அஸ்வின் குமார், அஞ்சு குரியன் நடித்திருக்கும் ‘வாடி வாடி’ மியூஸிக் ஆல்பம்

Think Originals’ தொடர்ந்து  இசை பிரியர்களின் இதயம் அள்ளும்  சுயாதீன ஆல்பம் பாடல்களை வழங்கி வருகிறது.  

அந்த வகையில் இந்த Think Originals நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘வாடி வாடி’ வீடியோ பாடல் இன்று வெளியானது..!

இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.

இப்பாடல் அதன் அற்புதமான இசை மற்றும் அசத்தலான காட்சிகளுக்காக ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான இசைக் கோர்வை மற்றும் பாடலாசிரியர் விவேகாவின் நவநாகரீக பாடல் வரிகள் ரசிகர்களை  ஈர்க்கும் அம்சமாக அமைந்துள்ளன.

அஸ்வின் குமார், லக்ஷ்மிகாந்தன் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோரின் அழகான நடிப்பு கெமிஸ்ட்ரி மனதை கொள்ளை கொள்கிறது.

ஒளிப்பதிவு நாயகன் ஆர்.டி.ராஜசேகர் தனது அற்புதமான ஒளிப்பதிவின் மூலம் பாடலுக்கு வலிமை சேர்த்துள்ளார். தமிழ் ஆல்பங்களிலேயே மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்ட முதல் தமிழ் வீடியோ பாடல் ‘வாடி வாடி’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாடி வாடி’ பாடலை கார்த்திக் அரசகுமார் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகர் ISC யும், படத்தொகுப்பை ஆண்டனியும் செய்துள்ளனர். இந்த பாடலுக்கு சாண்டி நடனம் அமைத்துள்ளார். பாடல் வரிகளை விவேகா எழுதியுள்ளார்.

D.R.K.கிரண் (கலை இயக்கம்), போற்றி பிரவின் (காஸ்ட்யூம் டிசைனர்), விக்னேஷ் (இணை இயக்கம்), காமராஜ் (நிர்வாகத் தயாரிப்பாளர்), சரஸ்வதி (நிர்வாக மேலாளர்), திலீப் போர்கர் & ஆகாஷ் போர்கர் (லைன் புரடியூசர்ஸ்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா D’One (பத்திரிகை தொடர்பு).

Our Score