படத்தின் லோகோ பைக் ரேஸில் வெளியீடு..!

படத்தின் லோகோ பைக் ரேஸில் வெளியீடு..!

அருண்விஜய் நடிக்கும் புதிய படமான “வா டீல்” படத்தின் டைட்டில் லோகோ இன்று சென்னையை அடுத்த இருக்காட்டுங்கோட்டையில் நடைபெற்ற பார்முலா 3 கார் ரேசில் வெளியிடப்பட்டது.  Feather Touch Entertainment’S -ன் தயாரிக்கும் இப்படத்தை  கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் R. சிவஞானம்.

இப்படத்தின் கதையின்படி கார், பைக் ரேஸ் போன்ற காட்சியமைப்புகள் இதில் இருப்பதால், பைக் ரேஸ் போட்டியின்போடது லோகோவை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதற்காக “வா-டீல்”  டைட்டில் லோகோவை இங்கே வெளியிட்டுள்ளார்களாம்.  இந்தியாவில் வளர்ந்து வரும் கார் பந்தய வீர்ரான Mihir Dharkar ஒட்டிய கார் நம்பர் 9-இல்  வா-டீல் படத்தின் லோகோவும் பொருத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஹீரோ அருண்விஜய், இயக்குனர் சிவஞானம், கேமராமேன் கோபி ஜெகதீஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் M.ஹேமந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடந்த வா-டீல் படபிடிப்பும் முடிவடைந்துவிட்டது. கடைசி நாளன்று பூசணிக்காய் உடைத்து, கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, படபிடிப்பை நிறைவு செய்துள்ளனனர். மிக விரைவில் இப்படத்தின் இசை  வெளியீடு  நடைபெறவுள்ளது.

இதில் ஹீரோயினாக கார்த்திகா நடித்திருக்கிறார். சதீஷ்,  சுஜா வாருணி, ஜெயபிரகாஷ், கல்யாண், வம்சி, ரேணுகா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன். இசை – தமன். பாடல்கள் – விவேகா. எடிட்டிங் – பிரவீன்-ஸ்ரீகாந்த்,   ஸ்டண்ட் – ராஜசேகர். கலை – மோகனமகேந்திரன். தயாரிப்பு நிர்வாகம் – அஸ்ரப் & ஹக்கீம்.  M. சுசில்மோகன், ஆர்த்தி அருண், & M. ஹேமந்த் ஆகிய மூவரும் தயாரிக்கிறார்கள். இதே கம்பெனிதான் தடையறத் தாக்க படத்தையும் தயாரித்தது என்பது குறிப்பிட்டது. 

Our Score