மார்ச் 1-ல் ‘உத்தமவில்லன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா

மார்ச் 1-ல் ‘உத்தமவில்லன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா

இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், கமல்ஹாசன் நடித்திருக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 1-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

uthamavillan-audio-invitation-1

இந்தப் படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி,  நாசர், ஊர்வசி, சித்ரா லட்சுமணன், இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் கே.விஸ்வநாத் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஷம்தத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதையை கமல்ஹாசனே எழுதியிருக்கிறார். பிரபல நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார்.

uthamavillan-audio-invitation-2

இந்தப் படத்தின் பின் பணி வேலைகள் அனைத்தும் அமெரிக்காவில் நடந்துள்ளன.  படம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி ரிலீஸாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 1-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

uthamavillan-audio-invitation-3

சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள இந்த விழாவில் ஒட்டு மொத்த தமிழ்ச் சினிமாவுலகமே திரண்டு வருகிறதாம்..!

உத்தமவில்லன் படத்தின் டிரெயிலர் இது :

Our Score