full screen background image

மே 5-ம் தேதி வெளியாகும் ‘உருச்சிதை’ திரைப்படம்..!

மே 5-ம் தேதி வெளியாகும் ‘உருச்சிதை’ திரைப்படம்..!
VDS சினிமாஸ் சார்பில் வேணுகோபால் தேவராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘உருச்சிதை’.
 
புதுமுகங்களான கார்த்திகேயன் மற்றும் சுகுணா இருவரும் ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில் நெல்லை சிவா, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் நடித்த கடைசி படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.ஆனந்த் இசையமைத்துள்ளார். மகிபாலன் ஒளிப்பதிவு செய்ய, படத் தொகுப்பை லக்ஷ்மண் கவனிக்கிறார். சண்டை காட்சிகளை தீப்பொறி நித்யா வடிவமைத்துள்ளார். அறிமுக இயக்குனர் எம்.சி.வி. தேவராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

எங்கேயும் நடந்திருக்க முடியாத கேள்விப்பட்டிராத கதையம்சத்துடன், குடும்பப் பாங்கான அதேசமயம் ஆக்சன் த்ரில்லராக இந்தப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலரை கில்ட் அமைப்பின் தலைவரும், ஸ்டண்ட் மாஸ்டருமான ஜாகுவார் தங்கம் வெளியிட்டார்.

 
வரும் மே 5-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
 
uruchithaivu-3 uruchithaivu-2
Our Score