‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட்..

‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட்..

‘தல’ அஜீத்தின் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி.

அஜீத் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

இந்தியாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தையும் சமீபத்தில் ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற்ற இரண்டாம் கட்ட படப்பிடிப்பின்போதே முழுமையாக எடுத்து முடித்துவிட்டாராம் இயக்குநர் வினோத்.

அடுத்து ஒரேயொரு ஷெட்யூலில் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது. அதுவும் இந்த டிசம்பர் மாதத்திலேயே முடிந்துவிடும்.

அதன் பின்பு போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகள் மற்ற பின் பணி வேலைகளும் முடிந்து படம் ஏப்ரல் 14 அல்லது மே 1-ம் தேதியன்று கண்டிப்பாக திரைக்கு வரும் என்று அந்தப் படத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் உறுதியுடன் சொல்கிறார்கள்.

ஏப்ரல் 14-ல் ‘அண்ணாத்தே’ வெளியானால், ‘வலிமை’ மே 1-க்குத் தள்ளிப் போகும். அன்றைக்குத்தான் ‘தல’யின் பிறந்த நாள் என்பதால், அதுவும் பொருத்தமாகத்தான் இருக்கும்..!