full screen background image

‘ஆரா சினிமாஸ்’ நம்பிக்கையுடன் வெளியிடும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’

‘ஆரா சினிமாஸ்’ நம்பிக்கையுடன் வெளியிடும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’

சமீபத்தில் விநியோக துறையில் கால் பதித்து தரமான படங்களை தேர்ந்து எடுத்து வெளியிடும் ஆரா சினிமாஸ் நிறுவனத்தினர் தங்களது முதல் தமிழ் படமான ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ திரைப்படத்தை விநாயக சதுர்த்தி நாளான வரும் செப்டம்பர் 17-ம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்தப் படத்தில்  தீபக் பரமேஷ், ஜாக்லீன் பிரகாஷ், குணாலன் மோகன், மோர்ணா அனிதா ரெட்டி, ‘மைம்’ கோபி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு – மணிஷ் மூர்த்தி, படத் தொகுப்பாளர் –ஹரிஹரன், இசை – சிவ சரவணன், கலை இயக்குனர் – CH மோகன்ஜி, கதை – MRK & ஸ்ரீநாத் ராமலிங்கம், தயாரிப்பு – N ஷண்முகசுந்தரம் , K முகமது யாசின், இயக்கம் – ஸ்ரீநாத் ராமலிங்கம்.

இந்தப் படத்தை வெளியிடவுள்ள ஆரா சினிமாஸ் நிறுவனத்தின் நிறுவனர் மகேஷ், இந்தப் படம் பற்றிப் பேசும்போது, “இந்தப்  படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது. திரை அரங்கங்கள் எங்கள் படத்தை வெளியிட  ஆவலுடன் முன் வந்திருப்பது, இந்த படத்துக்காக உழைத்த திறமையான இளம் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமாகும்.

இந்தப் படம் வெறும் பணத்தை மட்டுமே ஆதாராமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட  படம் அல்ல.  இப்படியும் நடக்குமா என நாம் சிந்திக்கும் பல நிகழ்வுகளை அடக்கிய படம்தான் இந்த ‘உனக்கென்ன வேணும் சொல்லு’.

இந்தப் படத்துக்கு ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்ற தலைப்பை வைக்கும்போதே எங்களுக்கு அசுர பலம் கிடைத்துவிட்டதைப் போல் உணர்ந்தோம். அந்த பலமே இப்போது எங்களை வெற்றிப் பாதைக்கு இட்டு செல்லும் என்று நம்புகிறோம்..” என்று உறுதியுடன் கூறினார்.

Our Score