full screen background image

கிராமத்துப் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘உலகநாதன்’ திரைப்படம்!

கிராமத்துப் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘உலகநாதன்’ திரைப்படம்!

ஆதி photos நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் A.D.ஆதிநாடார் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘உலகநாதன்’.

‘விருது’ படத்தில் கதாநாயகனாக நடித்த அட்சயன் இந்தப் படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நடிகர் கஞ்சா கருப்பு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். ஹீரோ அட்சயனுக்கு ஜோடியாக யோகதர்சினி, கிரேட்டா இரண்டு புதுமுக நாயகிகளும் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஹீரோவின்அம்மாவாக விஜய் டி.வி. புகழ் சசிகலா நடித்திருக்கிறார். வில்லனாக புதுமுக நடிகர் கடற்கரை நடித்திருக்கிறார்.

இசை – சார்லஸ் தனா, பாடல்கள் – சார்லஸ் தனா, ராமநாதன்,  ஒளிப்பதிவு – கணேஷ் சாய் பிரசாத், நடன இயக்கம் – முருகேசன், மேக்கப் காஸ்டியூம்ஸ் – S .பிரபாவதி, பத்திரிக்கை தொடர்பு – பழனிவேல், தயாரிப்பு – A.D. ஆதிநாடார், கதை, திரைக்கதை, வசனம், சண்டைப் பயிற்சி, படத் தொகுப்பு, இயக்கம். A.ஆதவன். 

கதாநாயகன் சிலம்பம் பயிற்சி முழுமையாக பெற்றவர் என்பதால் சிலம்பம் இடம் பெறும் சண்டைக் காட்சிகளில் அவரே டூப் இல்லாமல் நடித்து படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்க வந்தவர்களின் கை தட்டல்களையும், பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார்.

கிராமிய கதையமைப்போடு காதலும், மோதலும் சென்டிமென்ட்டும் கலந்த ஃபேமிலி படமாக இந்த ‘உலகநாதன்’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரை, மற்றும் இராஜபாளையத்தைச் சுற்றியுள்ள அழகான பகுதிகளில் நடந்திருக்கிறது.

Our Score