full screen background image

அம்மா-மகன் சென்டிமெண்ட் கதையில் உருவாகியிருக்கும் ‘உலகநாதன்’ திரைப்படம்!

அம்மா-மகன் சென்டிமெண்ட் கதையில் உருவாகியிருக்கும் ‘உலகநாதன்’ திரைப்படம்!

‘விருது’ படத்தை இயக்கிய இயக்குநர் ஆ.ஆதவன், தற்போது ‘உலகநாதன்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ‘விருது’ படத்தில் நாயகனாக நடித்த அட்சயன் இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இதன் மூலம் இயக்குநர் ஆ.ஆதவனும், நாயகன் அட்சயனும் இரண்டாவது முறையாக கை கோர்த்துள்ளனர்.

ஆதி போடோஸ் நிறுவனம் சார்பில் ஏ.டி.ஆதிநாடார் தயாரிக்கும் இப்படம் கிராமிய கதையமைப்போடு காதலும், மோதலும் கலந்த அம்மா – மகன் சென்டிமெண்ட் கதையம்சத்தில் உருவாகிறது.

இந்த படத்தில் நாயகன் அட்சயனுக்கு ஜோடியாக தர்ஷினி மற்றும் கிரேட்டா நடித்திருக்கிறார்கள். நாயகனின் அம்மாவாக விஜய் டிவி புகழ் சசிகலா நடித்திருக்கிறார். நடிகர் கஞ்சா கருப்பு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். வில்லன்களாக கடற்கரை, நாகராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

சார்லஸ் தனா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை சார்லஸ், ஆதிநாடார் ராமநாதன், ஆதவன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் ஆ.ஆதவன், சண்டைப் பயிற்சி மற்றும் படத் தொகுப்பு ஆகியவற்றையும் கவனிக்கிறார். 

அனைத்துவிதமான கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த படமாக உருவாகியுள்ள இதில், கதாநாயகன் முறையாக சிலம்பம் கற்றவர் என்பதால், சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.டி.ஆதிநாடார் மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

தற்போது பின்னணி பணிகளில் ஈடுபட்டிருக்கும் படக் குழு விரைவில் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

Our Score