தேன்மொழி சுங்குரா தயாரிப்பில் தம்பி ராமையா இயக்கத்தில் அவரது மகன் உமாபதி நடிக்கும் திரைப்படம் ‘உலகம் விலைக்கு வருது.’
பல முன்னணி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தம்பி ராமையா கடந்த நான்கு மாதங்களாக தனது நடிப்பு வேலைகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு முழு வீச்சில் தன் மகன் உமாபதி நடிக்கும் ‘உலகம் விலைக்கு வருது’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் மிருதுளா முரளி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், சமுத்திரக்கனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, Y.G.மகேந்திரன், பவன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சிங்கம்புலி, சாமிநாதன், ஸ்ரீஜா ரவி, ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – P.K.வர்மா. இசை- தினேஷ். படத் தொகுப்பு – கோபிநாத், கலை – வைரபாலன், நடனம் – தினேஷ், நிர்வாக தயாரிப்பு – சாகுல் ஹமீத், அய்யாசாமி, தயாரிப்பு நிர்வாகம் – சுப்பு சண்டை பயிற்சி – ஹரி தினேஷ், மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு – தேன்மொழி சுங்குரா, எழுத்து, இயக்கம் – தம்பி ராமையா.
நேற்று 30-10-2017 புதுக்கோட்டை மாவட்டம் மலையக்கோயில் கிராமத்தில் உள்ள மலைக் கோவிலான 7-ம் நூற்றாண்டின் முருகன் கோவிலில் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு முதல் நாள் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
தப்பட்டம், மயிலாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் என நூற்றுக்கணக்கான கிராமியக் கலைஞர்களை வைத்து நான்கு கேமராக்களுடன் தினேஷ் அவர்களின் நடன வடிவமைப்பில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.
வரும் நாட்களில் புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம் ஆகிய இடங்களில் இத்திரைப்படம் படமாக்கப்படவுள்ளது.