full screen background image

“தமிழ் சினிமாவை மிரட்டி வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்” – இயக்குநர் மிஷ்கின் பேச்சு

“தமிழ் சினிமாவை மிரட்டி வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்” – இயக்குநர் மிஷ்கின் பேச்சு

இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருக்கும் ‘கலகத் தலைவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, “இந்த மாலை நேரத்தில் நான் வருத்தமாக இருக்கிறேன். இன்று நடந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா தோற்றுவிட்டது. ஆனால் தற்போது இந்த விழா மேடையை பார்த்தவுடன் மகிழ்ச்சியாக உள்ளேன்.

உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழ் சினிமாவை மிரட்டி தன் கையில் வைத்துள்ளார். இனிமேல் நடிக்க மாட்டேன் என்றும் அடிக்கடி சொல்கிறார். அது தவறு. அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும். ரசிகர்கள்தான் வற்புறுத்தி அவரை நடிக்க வைக்க வேண்டும்.

என்னிடம் நிறைய கதைகள் உள்ளன. எப்போது உதயநிதி நடிக்க ரெடி என்றாலும் நான் அவரை இயக்க ரெடியாக உள்ளேன். சுந்தர்.சி-க்குக் கூட கதை வைத்திருக்கிறேன். வேண்டும் என்று அவர் கேட்டால் நிச்சயமாக தருவேன்.

உதயநிதி என் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஓகே சொன்னால், புதிய கதையில் அவரை இயக்குவேன்அதே சமயம் ‘சைக்கோ’ படத்தின் பார்ட்-2-வை எடுக்கும் திட்டமில்லை.. ” என்றார் மிஷ்கின்.

Our Score