full screen background image

ஒரே திரையில் இரண்டு படங்கள் – திரையுலகில் புது முயற்சி..!

ஒரே திரையில் இரண்டு படங்கள் – திரையுலகில் புது முயற்சி..!

முதல்முறையாக’, ‘வித்தியாசமான’, ‘புதுமையான அனுபவம்’ என்னும் வார்த்தைகள்  தமிழ் சினிமாவில் வழக்கமாக ஒவ்வொரு  திரைப்படத்தின் விளம்பரத்தின்போதும் சொல்லப்படும் வார்த்தைகளாகும்.

ஆனால்  இந்த  வார்த்தைகளுக்கு  உண்மையான அர்த்தத்தை  தந்து, முதல்முறையாக அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது சமீபத்தில் வெளியான ‘பிகினிங்’ படத்தின்  டிரெய்லர்.

லெப்டி மனுவல்  கிரியேஷன்ஸ் தயாரிப்பில்,  இயக்குநர் ஜெகன்  விஜயா இயக்கத்தில், வினோத் கிஷன்,  கௌரி கிஷன்,  சச்சின்,  ரோகிணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம்தான் இந்த ‘பிகினிங்’.

எழுத்து இயக்கம் – ஜெகன் விஜயா, இசை – சுந்தரமூர்த்தி கே.எஸ்.,  ஒளிப்பதிவு –வீரகுமார், படத் தொகுப்பு –  C.S.பிரேம்குமார், கலை இயக்கம் –  K.V.முருகமணி,  தயாரிப்பு நிர்வாகி –மாரியப்பன்,  கணபதி,  குரல்  பதிவாளர் – தீலீபன்,  இரணியன், ஆடியோகிராபி – டோனி.J, மிக்சிங் -ப்ளாக்  அண்ட்  ஒயிட்  ஸ்டுடியோ,  ஃபயர் பாக்ஸ்  ஸ்டுடியோ,  வண்ணம் – ராஜேஷ்.J, VFX – முகமது  அக்ரம்,  பத்திரிகை தொடர்பு – ஜான்சன், தயாரிப்பு – Lefty Manual Creations, வெளியீடு – மாஸ்டர்ஃபீஸ்,  தயாரிப்பாளர் – விஜயா  முத்துசாமி,  இணை தயாரிப்பு – பிரபாகரன்  நாகரத்தினம்,  சுப்ரமணி  பிரபாகரன்,  கோபி  அண்ணா,  பொன்னி  பிரபு,  அன்பரசி பாபு.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ஒட்டு மொத்தத் திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்ததுடன், ரசிகர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

ஆசியாவில் முதல்முறையாக ‘ஸ்பிலிட் ஸ்கிரீனில்’  இரண்டு கதைகளை  காட்டும் டெக்னிக்கில்  இப்படம் உருவாகியுள்ளது. 

இப்படத்தில் திரையின் இடது பக்கம் ஒரு கதை விவரிக்கப்படும். வலது பக்கம்  மற்றொரு கதை  நடைபெறும்.  ஒரே  சமயத்தில்  இது  நடக்கும்.  அதேநேரத்தில்,  பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள். ஒரு டிராமா, ஒரு திரில்லர்  என்று முற்றிலும்  மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே  நேரத்தில்  பார்ப்பது ரசிகர்களுக்கு புதுவகையான அனுபவமாக இருக்கும்.

Our Score