full screen background image

தேர்தல் பிரச்சாரத்தில் மனைவி ஒரு கட்சி..! கணவர் ஒரு கட்சி..!

தேர்தல் பிரச்சாரத்தில் மனைவி ஒரு கட்சி..! கணவர் ஒரு கட்சி..!

தம்பதிகள் இருவரில் ஒருவர் ஏதேனும் ஒரு கட்சியின் அனுதாபியாக  இருப்பார்கள். ஆக்டிவ்வான உறுப்பினராக இருவருமே ஒரே கட்சியில் இருப்பார்கள். இதைத்தான் நாம் இதுவரையிலும் பார்த்திருக்கிறோம்..!

இப்போதுதான் ஒரு புதுமையான விஷயமாக மனைவி ஒரு கட்சியிலும், கணவன் ஒரு கட்சியிலுமாக சேர்ந்து கட்சிகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை கேள்விப்படு்கிறோம்..!

சின்னத்திரையில் நகைச்சுவை நடிப்பில் கொடி கட்டிப் பறக்கும் தம்பதிகளான கணேஷ்-ஆர்த்திதான் இந்தத் தம்பதிகள்.. இவர்கள் இருவருமே பெரிய திரைக்கு வரும்முன்பு சின்னத்திரையில் பல சீரியல்களில் ஜோடியாக நடித்தார்கள். பின்பு எதேச்சையாக காதலித்து திருமணமும் செய்து கொண்டார்கள்.

Arthi-Ganesh

இவர்களை சின்னத்திரையில் மிகவும் பாப்புலராக்கியது சன் டிவி. அதற்குப் பின் கலைஞர் டிவி. இவர்களின் திருமணத்திற்கு கலைஞர், ஸ்டாலின், கனிமொழி உட்பட தி.மு.க. சார்பாளர்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்துத் தெரிவித்தனர். மானாட மயிலாட நிகழ்ச்சியில்கூட இவர்களது பங்களிப்பு பிரதானமாக இருந்தது. கலைஞர் டிவியில் எந்தவொரு பண்டிகை நாள் நிகழ்ச்சிப் பட்டியலிலும் இவர்களுடைய நிகழ்ச்சி இல்லாமல் இருக்காது. அந்த அளவுக்கு கலைஞர் டிவியின் ஆஸ்தான நடிகர், நடிகையராகவே இருந்தனர்.

ஆர்த்தி இதன் பின்பு பெரிய திரையில் பல பெரிய நடிகைகளுக்குத் தோழியாக நடித்து பிரபலமானார். கணவர் கணேஷ் இன்னமும் சின்னத்திரையில்தான் உழன்று கொண்டிருக்கிறார்.  இப்போதும் கலைஞர் டிவி, சன் டிவியில் சில நிகழ்ச்சிகளி்ல் இருவருமே தலையைக் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலைமையில் தேர்தல் பிரச்சாரம் துவங்கிய சில நாட்களுக்கு முன்பு ஆர்த்தி அ.தி.மு.க.வில் இணைந்து ஜெயலலிதாவிடம் ஆசி பெற்று பிரச்சாரத்திற்குக் கிளம்பிவிட்டார்.

Amma-Aarthi

இது நடந்து சில நாட்கள் கழித்து ஆர்த்தியின் கணவர் கணேஷ் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டார்.  அங்கேயும் உறுப்பினர் அட்டை வாங்கிய கையோடு மயிலாப்பூரில் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு திரட்ட களத்தில் இறங்கிவிட்டார்.

ganesh-bjp

இதென்னடா கூத்து என்று அரசியல் கட்சிகளுக்கு யோசிக்கக்கூட நேரமில்லை.. அந்தளவுக்கு உட்கட்சிப் பிரச்சினையில் அவர்கள் பிஸியாக இருக்கிறார்கள்.. இங்கே தம்பதிகளோ ஆளுக்கொரு பக்கமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதுவெல்லாம் கொள்கைக்காகவா..? அல்லது துட்டுக்காகவா… ?என்பது தேர்தல் முடிந்ததும் தெரிய வரும்..!

Our Score