நடிகை த்ரிஷா நடித்து முடித்துள்ள ‘கொடி’ மற்றும் ‘நாயகி’ ஆகிய படங்கள் விரைவில் வெளிவரவுள்ள நிலையில், மீண்டும் ஒரு த்ரில் படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.
விஜய் நடித்த ‘மதுர’, பிரசாந்த் நடித்த ‘சாக்லேட்’ ஆகிய படங்களை இயக்கியவரும் ஷங்கரின் உதவியாளராக இருந்தவருமான இயக்குனர் மாதேஷ் இந்த படத்தை இயக்கவுள்ளார்.
‘மோஹினி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் சொல்கின்றன. ’நாயகி’ படம் போலவே இந்த படமும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால்தான் இந்த டைட்டிலாம்.
சூர்யாவின் ‘சிங்கம் 2′, படத்தை தயாரித்த லக்ஷ்மண் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு லண்டனில் நடைபெறவுள்ளதாம்.
Our Score









