வரும் ஏப்ரல் 1-ம் தேதியான முட்டாள்கள் தினத்தன்று ஒரு நகைச்சுவை கலந்த திரில்லர் படத்தின் டிரெயிலரை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள்.. தில்லான முடிவுதான்..!
ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க.. கிருஷ்ணா, கருணாகரன், ரூபா மஞ்சரி, ஓவியா மற்றும் பலர் நடிக்கும் படம் ’யாமிருக்க பயமே.’ எஸ்.என்.பிரசாத் இசையமைத்திருக்கிறார். டி.கே. என்னும் புதியவர் இயக்கியிருக்கிறார். 16-க்கும் மேற்பட்ட புதிய தொழில் நுட்ப கலைஞர்கள் அறிமுகமாகும் இந்த ‘யாமிருக்க பயமே’ படம் மே மாதம் வெளிவர உள்ளது.
“அறிமுக இசை அமைப்பாளர் எஸ்.என்.பிரசாத் ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பள்ளியில் பயின்றவர். இந்தச் செய்தியும், இவருடைய வித்தியாசமான இசையும் படத்தின் இசை மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது…” என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். இப்படத்தின் இசை வருகின்ற ஏப்ரல் 16-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாம்.