தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் அடுத்த படைப்பு ‘இராவணக் கோட்டம்.’
இந்தப் படத்தில் ஷாந்தனு பாக்யராஜ் மற்றும் கயல் ஆனந்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபு, இளவரசு, P.L.தேனப்பன், தீபா சங்கர், அருள்தாஸ் மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர்.
பான் இந்திய அளவில் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வரக்கூடிய ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘மதயானை கூட்டம்’ படப் புகழ் விக்ரம் சுகுமாறன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று (ஜனவரி 10,2023) வெளியிடப்பட்டது.
இந்த முதல் பார்வை வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இந்தப் படத்தின் டிரெயிலர் ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ திரைப்படங்களோடு 250 ஸ்கிரீன்களில் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படவுள்ளது.
கண்ணன் ரவி க்ரூப்பின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசும்போது, “இராவணக் கோட்டம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. இதன் ட்ரைய்லர் அஜித் சாரின் ‘துணிவு’ மற்றும் விஜய் சாரின் ‘வாரிசு’ படத்துடன் தமிழகத்தில் 250 ஸ்கிரீன்களில் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். சீக்கிரமே படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அறிவிக்க இருக்கிறோம். விக்ரம் சுகுமாறன், நடிகர் ஷாந்தனு பாக்யராஜ், நடிகை ஆனந்தி, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் மற்றும் மொத்த படக் குழுவின் ஆதரவிற்கும் நன்றி” என்றார்.
 
 
                                                                     
     
                                                             
                                
 
  
  
 







