full screen background image

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் செப்டம்பர் 5, 2014

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் செப்டம்பர் 5, 2014

இன்று செப்டம்பர் 5, 2014 வெள்ளியன்று 6 நேரடி தமிழ்ப் படங்கள் ரிலீஸாகியுள்ளன.

1. அமரகாவியம்

amara-kaaviyam-movie-posters

The Show People நிறுவனத்தின் சார்பில் நடிகர் ஆர்யா தயாரித்திருக்கும் படம் இது. இதில் ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடித்திருக்கிறார். மியா ஜார்ஜ் ஹீரோயின். சூர்யா ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். நான் படத்தை இயக்கிய ஜீவாசங்கர் இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

2. பொறியாளன்

poriyalan-poster

Ace Maas Medias நிறுவனத்தின் சார்பில் ஏ.கே.வெற்றி வேலவன், எம்.தேவராஜூலு ஆகியோருடன், இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கின்றனர்.

இதில் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க.. ஆனந்தி ஹீரோயினாக நடித்திருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய.. எம்.எஸ்.ஜோன்ஸ் இசையமைத்திருக்கிறார். எழுதி இயக்கியிருக்கிறார் மணிமாறன்.

3. பட்டைய கெளப்பணும் பாண்டியா

Pattaya Kelappanum Pandiya - poster

முத்தியரா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் எம்.ஆணிமுத்து தயாரித்திருக்கிறார். இதில் விதார்த்-மனீஷா யாதவ் ஜோடியாக நடித்திருக்கின்றனர். சூரி, இளவரசு, இமான் அண்ணாச்சி, கோவை சரளா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். மூவேந்தர் ஒளிப்பதிவு செய்ய அருள்தேவ் இசையமைத்திருக்கிறார். எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியிருக்கிறார்.

4. காதலைத் தவிர வேறொன்றுமில்லை

Kadhalai-Thavira-Verondrum-Illai-Wallpapers

‘வசீகரா’, ‘பிரியமானவளே’, ‘நினைத்தேன் வந்தாய்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் கே.செல்வபாரதி தயாரித்து இயக்கியிருக்கும் அடுத்த படம் இது.

இதில் யுவன், சரண்யா ஹீரோ, ஹீரோயினாக நடித்திருக்கின்றனர். பூபதி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். எம்.பாலா படத்தொகுப்பு செய்திருக்கிறார். எழுதி இயக்கியிருக்கிறார் கே.செல்வபாரதி.

5. வலியுடன் ஒரு காதல்

Valiyudan-Oru-Kadhal-poster

Matha’s Blessing Studio சார்பில் ஆர்.ரீத்தா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். புதுமுகங்களான ராஜேஷ், கெளரி நம்பியார் இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள். செல்வக்குமார் ஒளிப்பதிவு செய்ய.. டி.கே.செல்வராஜ் இசையமைத்திருக்கிறார்.  சி.எம் சஞ்ஞீவன் எழுதி, இயக்கியிருக்கிறார்.

6. கள்ளச்சாவி

kalla-chavi-movie-poster

சிவா முருகா பிக்சர்ஸுடன் இணைந்து டி.கே.எம். புரொடெக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் இது. ராஜேஸ்வரன் எழுதி, இயக்கியிருக்கிறார்.

Our Score