இன்று செப்டம்பர் 26, 2014 வெள்ளியன்று 4 நேரடி தமிழ்ப் படங்கள் ரிலீஸாகியுள்ளன.
1. ஜீவா
தி ஷோ பீப்பிள், தி நெக்ட்ஸ் பிக் பிலிம், வெண்ணிலா கபடி குழு புரொடெக்சன்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களை இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கின்றன.
இதில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா ஹீரோ, ஹீரோயினாக நடித்திருக்கின்றனர். மதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். டி.இமான் இசையமைத்திருக்கிறார். சுசீந்திரன் இயக்கியிருக்கிறார். நடிகர்கள் விஷாலும், ஆர்யாவும் இணைந்து இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் கிரிக்கெட் வீரர் ஒருவன் தேசிய கிரிக்கெட் அணியில் சேர என்ன பாடுபடுகிறான் என்பதுதான் கதை..!
2. மெட்ராஸ்
ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இதில் கார்த்தி ஹீரோவாகவும், கேத்தரின் தெரசா ஹீரோயினாகவும் நடித்திருக்கின்றனர். சி.முரளி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பிரவீண் எடிட்டிங் செய்திருக்கிறார். A Dream Factory நிறுவனம் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறது.
வடசென்னையைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீரனை பற்றிய கதை இது.
3. தலக்கோணம்
எஸ்.ஜே.எஸ். இண்டர்நேஷனல் சார்பில் திருமலை சிவம் தயாரிப்பில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.பத்மராஜ் இயக்கியிருக்கும் படம் ‘தலக்கோணம்’.
இப்படத்தில் நாயகனாக ஜிதேஷ், நாயகியாக ரியா நடித்திருக்கின்றனர். கோட்டா சீனிவாசராவ், கஞ்சா கருப்பு, பெரோஸ்கான், நம்பிராஜ், சண்முகசுந்தரம், பாண்டு, காதல் அருண்குமார், நாராயணமூர்த்தி, டெலிபோன் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
‘தலக்கோணம்’ படத்திற்கு ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்ய, சுபாஷ், ஜவஹர் இசை அமைத்திருக்கிறார்கள். என்.எஸ்.எஸ். என்று சொல்லப்படும் நாட்டு நலத்திட்டப் பணிகளை மையப்படுத்திய கதை இது.
4. அம்பேல் ஜூட்
மணிவேல் மற்றும மணி இருவரும் தயாரித்திருக்கிறார்கள். அமரன் வெளியிட்டிருக்கிறார். ஆனந்த்மேனன் ஒளி்ப்பதிவு செய்ய.. டி.எஸ்.திவாகர் இயக்கம் செய்திருக்கிறார்.