இன்று செப்டம்பர் 19, 2014 வெள்ளிக்கிழமை 6 நேரடி தமிழ்ப் படங்கள் ரிலீஸாகியுள்ளன.
1. ஆடாம ஜெயிச்சோமடா
ஸ்கைலைட் கிரியேஷன்ஸ் சுதீர் ஜெயினுடன் இணைந்து பி அண்ட் சி பிலிம்ஸ் சார்பில் பத்ரி தயாரித்து இயக்கியிருக்கும்ம் படம் ‘ஆடாம ஜெயிச்சோமடா’.
இவர் ஏற்கனவே ‘வீராப்பு’, ‘ஐந்தாம் படை’, ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘தில்லுமுல்லு’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ‘ஆடாம ஜெயிச்சோமடா’ இவருடைய ஐந்தாவதாக படம்.
இதில் ‘சூது கவ்வும்’ கருணாகரன் ‘நேரம்’ சிம்ஹா, பாலாஜி, விஜயலட்சுமி, நரேன், ராதாரவி, விச்சு, சித்ரா லட்சுமணன், சேத்தன், அபிஷேக் ஆகியோர் நடித்திருக்கின்றனர். டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்.
துவாரநாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஷீன் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கே.ஜே.வெங்கட்ரமணன் எடிட்டிங் செய்துள்ளார். வசனத்தை நடிகர் மிர்ச்சி சிவா எழுதியிருக்கிறார்.
2. அரண்மனை
விஷன் ஐ மீடியாஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் வினய், ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, லட்சுமிராய், சந்தானம், சரவணன், நிதின் சத்யா கோவை சரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், சந்தான பாரதி, ஆர்த்தி, அகிலா, மீரா கிருஷ்ணன், லொள்ளு சபா சாமிநாதன், கிரேன் மனோகர், செளந்தர், அல்வா வாசு, யோகி பாபு, ஆர்த்தி கணேஷ், விச்சு, கெளதம், இயக்குநர் ராஜ்கபூர், வெள்ளை பாண்டி தேவர், சிவஷங்கர் மாஸ்டர், சீர்காழி சிவசிதம்பரம், பாடகர் மாணிக்கவிநாயகர் என்று ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்திருக்கிறது. கூடவே சுந்தர் சி.யும் நடித்திருக்கிறார்.
யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார். பா.விஜய், பிறைசூடன், அண்ணாமலை ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். எழுதி, இயக்கியிருக்கிறார் சுந்தர் சி.
3. ஆள்
2008-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘அமீர்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் இது.
இந்தப் படத்தை சௌந்தர்யன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. கதாநாயகனாக விதார்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹார்த்திகா ஷெட்டி நடிக்கிறார். என்.எஸ்.உதய்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரமேஷ் பாரதி எடிட்டிங் செய்துள்ளார். ஜோஹன் இசையமைக்க.. கவிஞர் வாலி, நா.முத்துக்குமார், கார்க்கி, ஆனந்த் கிருஷ்ணா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். ஆனந்த் கிருஷ்ணா இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியிருக்கிறார்.
4. ரெட்ட வாலு
ப்ரணவ் புரொடெக்சன்ஸ் சார்பில் ஜெய இளவரசன் தயாரித்திருக்கும் படம் ரெட்டவாலு. இதில் நாயகனாக அகில், நாயகியாக சரண்யா நாக் நடித்திருக்கின்றனர். தம்பி ராமையா, கோவை சரளா, பசங்க சிவகுமார், கும்கி ஜோமல்லூரி , சோனா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு சிட்டிபாபு. பானுமுருகன். இசை – செல்வகணேஷ். பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் தேசிகா.
5. தமிழ்ச்செல்வனும், கலைச்செல்வியும்
இந்தப் படத்தை AJ Brothers நிறுவனம் தயாரித்திருக்கிறது. Mayil Mass Media நிறுவனம் வாங்கி வெளியிட்டிருக்கிறது. சந்திரா மார்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.பாண்டியன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
6. மைந்தன்
இதுவொரு மலேசிய தமிழ்நாடு கூட்டுத் தயாரிப்பு. NGP Film SDN BHD நிறுவனத்தின் சார்பில் நவநீதன் கணேசன் தயாரித்திருக்கிறார். முழுக்க முழுக்க மலேசிய நடிகர், நடிகைகளே இதில் நடித்திருக்கின்றனர். புன்னகை பூ கீதா இதில் ஒரு ஹீரோயினாக நடித்திருக்கிறார். சி.குமரேசன் எழுதி, இயக்கியிருக்கிறார்.