இன்று செப்டம்பர் 12, 2014 வெள்ளியன்று 3 நேரடி தமிழ்ப் படங்களும், 1 ஆங்கில டப்பிங் படமும் ரிலீஸாகியுள்ளது.
1. சிகரம் தொடு
யு டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை கௌரவ் இயக்கியிருக்கிறார். விக்ரம் பிரபு, மோனல் கஜ்ஜார், சத்யராஜ், சதீஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இமான் இசையமைத்திருக்கிறார். ‘அரிமா நம்பி’யின் வெற்றியினால் விநியோகஸதர்களும், தியேட்டர் உரிமையாளர்கள் மிக நம்பிக்கையுடன் இந்தப் படத்தை வாங்கியிருக்கிறார்கள்.
2. பர்மா
இன்றைய படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டிருக்கும் படம் இது. ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. மைக்கேல் ஹீரோவாகவும், ரேஷ்மி மேனன் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். மற்றும் சம்பத் ராஜ், அதுல் குல்கர்னி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். சுதர்ஷன் எம்.குமார் இசையமைத்திருக்கிறார். தரணிதரன் இயக்கியிருக்கிறார்.
3. வானவராயன் வல்லவராயன்
ஜீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மென்ட் வழங்க மகாலட்சுமி மூவீஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. கிருஷ்ணா, ம.க.ப. ஆனந்த், மோனல் கஜ்ஜார், தம்பி ராமையா, மீரா கிருஷ்ணன், கோவை சரளா, ஜெயபிரகாஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். யுவன்ஷங்கர்ராஜா இசையமைத்திருக்கிறார். ராஜமோகன் என்ற அறிமுக இயக்குநர் இதனை இயக்கியிருக்கிறார்.
4. துடிக்கும் துப்பாக்கி – ஆங்கில டப்பிங் படம்