full screen background image

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் அக்டோபர் 31, 2014

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் அக்டோபர் 31, 2014

இன்று அக்டோபர் 31, 2014 வெள்ளியன்று 3 நேரடி தமிழ்த் திரைப்படங்கள் ரிலீஸாகியுள்ளன.

1. நெருங்கி வா முத்தமிடாதே

Nerungi-Vaa-Muthamidathe-Movie-Posters-1

‘ஆரோகணம்’ திரைப்படத்திற்கு இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் அடுத்த படம் இது.

ஏ.வீ.ஏ நிறுவனம் சார்பில் ஏ.வீ அனூப் தயாத்திருக்கிறார். ஷபீர் கலரக்கல் கதாநாயகனாகவும் பியா பாஜ்பாய் கதாநாயகியாகவும் நடிக்க, ‘லூசியா’ புகழ் சுருதி ஹரிஹரன், தம்பி ராமைய்யா, ஒய்.ஜி மகேந்திரன், அம்பிகா, ஏ.எல். அழகப்பன், தலைவாசல் விஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு வினோத் பாரதி, படத் தொகுப்பு தேசிய விருது பெற்ற சாபு ஜோசப், இசை மேட்லி பிளூஸ், சண்டை பயிற்சி மிரட்டல் செல்வா, கலை-இயக்கம் ராஜா மற்றும் குமார்.  பாடல்களை நா.முத்துக்குமார் எழுத சங்கர் மாகாதேவன், சின்மயி உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

2. சோக்கு சுந்தரம்

sokku sundaram-poster

எம்.ஆர்வி. மேக்கர்ஸ் சார்பில் பி.குமாரபாளயைம் எம்.ராமசாமி தயாரிக்கும் படம் சோக்குசுந்தரம். இதில் நாயகனாக எம்.ஆர்.அறிமுகமாகிறார். பிரபல கன்னட நடிகை சௌஜன்யா நாயகியாக அறிமுகமாகிறார். வடிவுக்கரசி, குள்ளசுந்தர், போண்டாமணி, சாப்ளின் பாலு, பெஞ்சமின் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆணைவாரி ஸ்ரீதர் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘வேடப்பன்’, ‘ஒரு சந்திப்பில்’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர்.

ஒளிப்பதிவு: மனிபாலன், இசை: ஜேம்ஸ் விக்டர், எடிட்டிங்: ஆர்.ஜி.ஆனந்த், பாடல்: அண்ணாமலை, இறையப்பன், ஜெயங்கொண்டான்.

3. கல்கண்டு

Kalkandu movie audio release poster

‘ராட்டினம்’ படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்து தயாரித்திருக்கும் படம்தான் இந்த ‘கல்கண்டு.’

இந்த படத்தில் பிரபல நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். டிம்பிள் சோப்டே ஹீரோயினாக நடிக்கிறார்.

மற்றும் மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், ‘டாடி ஒரு டவுட்’ செந்தில், முத்துராமன், டி.பி.கஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி, ஜெனிபர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –   கே.வி.சுரேஷ், பாடல்களை  மதன்கார்க்கி, விவேகா, யுகபாரதி, அண்ணாமலை எழுத கண்ணன் இசையமைத்திருக்கிறார். நடனம்   –  சுஜாதா, தினா, தினேஷ். ஸ்டண்ட்   –  தளபதி தினேஷ். எடிட்டிங்   – சுரேஷ் அர்ஷ். கலை    –  ஜனா. தயாரிப்பு    –  J. மகாலட்சுமி. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : A.M.நந்தகுமார். இவர் ஏற்கெனவே விஜயகாந்த் நடித்த ‘தென்னவன்’, பிரஷாந்த் நடித்த ‘ஜாம்பவான்’ ஆகிய படங்களை இயக்கியவர்.

4. பேய் பொமமைகள் – ஆங்கில டப்பிங் படம்.

Our Score