இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் அக்டோபர் 2, 2014

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் அக்டோபர் 2, 2014

இன்று அக்டோபர் 2, 2014 வியாழக்கிழமையன்று 2 நேரடி தமிழ்ப் படங்களும், 1 ஹிந்தி டப்பிங் படமும் ரிலீஸாகியுள்ளது.

1. யான்

Yaan-Movie-Poster

ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார், ஜெயராமன் இணைந்து தயாரித்திருக்கின்றார்கள். இதில் ஜீவா ஹீரோவாகவும், துளசி நாயர் ஹீரோயினாகவும் நடித்திருக்கின்றனர். மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். எழுதி இயக்கியிருக்கிறார் ரவி.கே.சந்திரன்.

2. தெரியாம உன்னைக் காதலிச்சிட்டேன்

Theriyama-Unnai-Kadhalichitten

‘வசந்த் அண்ட் கோ’ நிறுவன உரிமையாளரும், வசந்த் தொலைக்காட்சி அதிபருமான எச்.வசந்தகுமாரின் இளைய மகனான வி.வினோத்குமார் தனது ‘டிரிப்புள் வி ரெக்கார்ட்ஸ்’ (Triple V Records) என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் கதாநாயகனாக தயாரிப்பாளர் வினோத்குமாரின் அண்ணன் விஜய் வசந்த் நடித்திருக்கிறார். கதாநாயகியாக ரஸ்னா நடித்திருக்கிறார். ஸ்ரீநாத் இசையமைத்திருக்கிறார். எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே.ராமு எழுதி இயக்கியிருக்கிறார்.

3. பிங் பேங் – ஹிந்தி டப்பிங்

bing-bang-movie-poster

ஹிரித்திக் ரோஷனும், கேத்ரீனா கைப்பும் நடித்திருக்கும் இப்படம் இந்தியாவில் மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டிருக்கும் படம்..

Our Score