இன்று 2014 நவம்பர் 7 வெள்ளியன்று 4 நேரடி தமிழ்ப் படங்கள் ரிலீஸாகியுள்ளன.
1. ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
Global Infotainment Pvt Ltd சார்பில் எஸ்.மைக்கேல் ராயப்பன் தயாரித்திருக்கும் இப்படத்தில் விமல், சூரி, பிரியா ஆனந்த், விசாகா சிங், நாசர், தம்பி ராமையா, சிங்கமுத்து, அனுபமா குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
டி.இமான் இசையமைத்திருக்கிறார். சூர்யா எடிட்டிங் செய்திருக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். யுகபாரதி, ஏக்நாத் இருவரும் பாடல்களை எழுதியிருக்கின்றனர். ஆர்.கண்ணன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
2. ஜெய்ஹிந்த்-2
சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் அர்ஜூனின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகம் இது.
இதில் அர்ஜூன், சுர்வீன் சாவ்லா, சிம்ரன் கபூர், பிரம்மானந்தம், மயில்சாமி, மனோபாலா, வினய் பிரசாத் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
ஹெச்.சி.வேணுகோபால் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அர்ஜூன் ஜெனியா இசையமைத்திருக்கிறார். பாடல்களை வைரமுத்து, பா.விஜய், இலக்கியன் மூவரும் எழுதியுள்ளனர். கே.கே. எடிட்டிங் செய்திருக்கிறார். வசனத்தை ஜி.கே.கோபிநாத் எழுதியுள்ளார். கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு – நடிகர் அர்ஜூன்.
3. பண்டுவம்
ஜி.எஸ் டெவலப்பர் என்ற பட நிறுவனம் சார்பாக P.குணசேகரன் தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தில் சித்தேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக சுவாசிகா நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தின் இயக்குனர் சிவக்குமாரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மற்றும் ஆண்டனி, கார்த்திக்., எம்.பகதூர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – முத்ரா, இசை – நீரோ, பாடல்கள் – பத்மாவதி, கலை – – விஜய் ஆனந்த், எடிட்டிங் – யோகா பாஸ்கர், ஸ்டண்ட் – விஜய், நடனம் – ராதிகா, எழுத்து-இயக்கம் – சிவக்குமார்.
4. முகப்புத்தகம்
WELLFARE PRODUCTIONS சார்பில் டாக்டர் விஜய்பிரசாத்மல்லா தயாரித்திருக்கும் இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ளனர்.
அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி.ஆனந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். கிருஷ்ணா கலை இயக்கம் செய்துள்ளார். ஆர்.பி.பட்நாயக் எழுதி, இயக்கியுள்ளார்.