இன்று 2015 மே 29 வெள்ளிக்கிழமையன்று 4 நேரடி தமிழ்ப் படங்களும், 1 ஆங்கில டப்பிங் படமும் வெளியாகியிருக்கின்றன.
1. மாசு என்கிற மாசிலாமணி
ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார். சூர்யா, நயன்தாரா, வெங்கட்பிரபு, ஸ்ரீமன், கருணாஸ், ஜெயபிரகாஷ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரவீன் எடிட்டிங் செய்திருக்கிறார். ராஜீவன் கலை இயக்கம் செய்திருக்கிறார். வெங்கட்பிரபு எழுதி, இயக்கியிருக்கிறார்.
2. சோன்பப்டி
கோல்டன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.கலைவாணி தயாரித்திருக்கிறார். இதில் ஸ்ரீ ஹீரோவா நடித்திருக்கிறார். நிரஞ்சனா ஹீரோயின். மேலும் மனோபாலா, கராத்தே ராஜா, சோனியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தன்ராஜ் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார். தணிகாசலம் எடிட்டிங் செய்திருக்கிறார். புதுமுக பெண் இயக்குநர் சிவாணி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
3. இருவர் ஒன்றானால்
ரமணா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஏ.எம்.சம்பத்குமார், அன்புஜி இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் இயக்குநரான அன்புஜி, தயாரிப்பாளர் ஏ.எம்.சம்பத்குமார். நாயகன் பி.ஆர்.பிரபு, நாயகி கிருத்திகா மாலினி, ஒளிப்பதிவாளர் குமார் ஸ்ரீதர், இசையமைப்பாளர் குரு கிருஷ்ணன், பாடலாசிரியர் நீலமேகம், எடிட்டர் பரமேஸ்வரன், கலை இயக்குநர் கலைமுருகன், நடனஇயக்குநர் பிரபு தனசேகர், டிசைனர் ரசூல் என அனைவருமே புதுமுகங்கள்தான். குணச்சித்திர நடிகர்கள் 12 பேரும் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
4. கருத்தப் பையன் செவத்தப் பொண்ணு
மனோஜ் எண்ட்டெர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஸ்ரீபவன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஷ்ராவனி ஹீரோயின். ராமகிருஷ்ணன் வசனம் எழுத, நானி கிருஷ்ணன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
SAAN ANDRIYAAS (ENGLISH)