இன்றைய ரிலீஸ் படங்கள் : மே 2, 2014 வெள்ளிக்கிழமை
நேற்று, மே 1 வியாழன்று விடுமுறை தினமாகவும் வந்துவிட்டதால் 3 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகிவிட்டன.
இன்றைக்கு 2 நேரடி தமிழ்ப் படங்களும், 1 டப்பிங் படமும் வெளியாகியுள்ளன.
1. எப்போதம் வென்றான்
ஏ.ஆர்.ஆர். கிரியேஷன்ஸ் சார்பில் டி.ஜி.எஸ். ராஜாராம் தயாரிக்கும் இந்தப் படத்தை சிவசண்முகன் எழுதி, இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கெனவே திண்டுக்கல் சாரதி என்ற படத்தை இயக்கியவர். இசை ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவு தமிழ்த் தென்றல்.
சென்ற மாதமே வெளியாகியிருக்க வேண்டியது.. கடைசி நேரத்தில் கோர்ட், கேஸ் என்று பிரச்சினைகள் உருவானதால் ஒரு மாதம் கழித்து இன்றைக்கு வெளியாகியுள்ளது.
2. நீ என் உயிரே
இதுவும் சின்ன பட்ஜெட் படம்தான். ஸ்ரீலட்சுமி விருஷாத்திரி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘நீ என் உயிரே’. இதில் புதுமுகங்கள் நவரசன் நாயகனாகவும் வைஷாலி நாயகியாகவும் நடிக்கின்றனர். வில்லனாக தங்கவேல் வருகிறார். ரவி, அட்சயா, அபூர்வா உதயஸ்ரீ, பூமிகா, மகந்தகுமார் பவர்டெக்ஸ் செல்வராஜ் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். லலித்ராஜா இயக்கியிருக்கிறார்.
இசை : விஜய் மந்த்ரா, ஒளிப்பதிவு : மோகன், ஜீவன் ஆண்டனி, பாடல் : பிறைசூடன், கதை, திரைக்கதை : நாவரசன், இணை தயாரிப்பு : பவர்டெக்ஸ் செல்வராஜ்.
ஹீரோவான கார் மெக்கானிக்கை ஹீரோயின் காதலிக்கிறாள். எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். காதலித்தவளை கண்கலங்காமல் காப்பாற்ற ஹீரோ போராடுகிறான். அப்போது அவன் வாழ்வில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. காதல் கணவனை நம்பி வந்தவள் வாழ்க்கை சீரானதா, சீரழிந்ததா என்பதுதான் படத்தின் மையக் கருத்தாம்.
3. மோக மந்திரம் என்னும் மேக்னா நாயுடு நடித்த மலையாள திகில் படம் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸாகியுள்ளது.