இன்று 2015, மே 15 வெள்ளிக்கிழமையன்று 3 நேரடி தமிழ்ப் படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன.
1.புறம்போக்கு என்னும் பொதுவுடமை
UTV மோஷன் பிக்சர்ஸ் சார்பில் சித்தார்த்ராய் கபூர் தயாரித்திருக்கிறார். ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா, ரமா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் N.K. ஏகாம்பரத்தின் கண்கவர் ஒளிப்பதிவில், செல்வகுமார் அவர்களின் வியத்தகு கலை இயக்கத்தில், கணேஷ் குமாரின் படத்தொகுப்பில், கேட்போரை மயக்கும் வண்ணம் இசையமைத்துள்ளார் அறிமுக இசையமைப்பாளர் வர்ஷன். மிராக்கல் மைக்கல் சண்டை பயிற்சியை அமைத்துள்ளார். திரைக்கதையை ரோகாந்த் எழுதியிருக்கிறார். கதை, வசனம் இயக்கம் செய்திருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.
2. 36 வயதினிலே
2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இதில் ஜோதிகா, ரகுமான், அபிராமி, நாசர், டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி, மோகன் ராமன், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
ஆர்.திவாகரன் ஒளிப்பதிவு செய்ய.. மகேஷ் நாராயணன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க விவேகா பாடல்களை எழூதியிருக்கிறார். பூர்ணிமா உடை அலங்காரத்தைக் கவனித்திருக்கிறார். விஜி வசனம் எழுத, கதை, திரைக்கதை, எழுதி இயக்கியிருக்கிறார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.
3. பேயுடன் ஒரு பேட்டி
கே டியூப் கிரியேஷன்ஸ் சார்பில் டி.கண்ணன் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். ரேகா மூவிஸ் படத்தினை வெளியிட்டுள்ளது. கஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய.. மாணிக்கம் இசையமைத்திருக்கிறார். வி.ஜெயபால் எடிட்டிங் செய்திருக்கிறார். ஜெயகாந்த் எழுதி, இயக்கியிருக்கிறார்.