இன்று மார்ச் 6, 2015 வெள்ளியன்று 7 நேரடி தமிழ்த் திரைப்படங்களும், 1 கன்னட டப்பிங் படமும் வெளியாகியுள்ளன.
1.எனக்குள் ஒருவன்
ஹீரோவாக சித்தார்த் இரு வேடங்களில் நடித்திருக்கிறார். தீபா சன்னதி என்ற கன்னட நடிகை ஹீரோயின். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசை – சந்தோஷ் நாராயணன். சி.வி.குமாரின் திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க.. அபி அண்ட் அபி நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.
2. ரொம்ப நல்லவன்டா நீ
சமீபத்தில் ரிலீசான ‘கில்லாடி’, ‘சண்டமாருதம்’ படங்களை தொடர்ந்து ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அடுத்து வெளியாகும் படம் ‘ரொம்ப நல்லவன்டா நீ’.
இதில் ‘மிர்ச்சி’ செந்தில் ஹீரோவாக நடிக்கிறார். கேரளாவைச் சேர்ந்த ஸ்ருதி பாலா ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் இந்தப் படத்தில் சர்வஜித், ஏ.வெங்கடேஷ், ரேகா, சோனா, ரோபோ சங்கர், ஜான் விஜய், இமான் அண்ணாச்சி, ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, கனல் கண்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
தீபக் குமார் நாயர், ஷெனாய் மேத்யூ இருவர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு மனோ நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராம் சுரேந்தர் இசை அமைத்துள்ளார். விஜய் எடிட்டிங் செய்துள்ளார். எழுதி, இயக்கியிருக்கிறார் ஏ.வெங்கடேஷ்.
3. தொப்பி
ராயல் ஸ்க்ரீன்ஸ் பரமராஜ் தயாரிப்பில், நிமோ புரடக்ஷன்ஸ் பாலு வழங்கும் இப்படத்தை இயக்குனர் யுரேகா இயக்கியுள்ளார். பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் முரளி ராம் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளுக்கு இசையமைத்திருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் ராம் பிரசாத் சுந்தர். ஒளிப்பதிவு மைனா சுகுமார்.
4. என் வழி தனி வழி
ஆர்.கே. ஹீரோவாகவும் பூனம் கவுர், ‘தெனாலிராமன்’ புகழ் மீனாக்ஷி தீட்சித் ஆகியோர் ஹீரோயின்களாகவும் நடித்திருக்கின்றனர். மேலும், டத்தோ ராதாரவி, விசு, ஆஷிஷ் வித்யார்த்தி, தலைவாசல் விஜய், இளவரசு, சம்பத், சீதா, ரோஜா மற்றும் காமெடிக்கு விவேக், பரோட்டா சூரி ஆகியோரும் நடித்துள்ளனர்.
காமிராவை ராஜரத்தினம் கையாள, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். சூப்பர் சுப்பாராயன் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார். பிரபாகர் வசனம் எழுதியுள்ளார். கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஷ்.
5. சேர்ந்து போலாமா
இதில் வினய் கதையின் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக வரும் மதுரிமா தெலுங்கு, இந்தியில் சில படங்களில் நடித்தவர். இன்னொரு முக்கிய பாத்திரத்தில் ப்ரீத்திபால் நடித்திருக்கிறார். தெலுங்கில் நாயகனாக வளர்ந்து வரும் நந்துவும் இதில் நடித்துள்ளார். அருண், தம்பி ராமையா, தலைவாசல் விஜய், அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு– சஞ்சீவ் சங்கர், இசை– விஷ்ணு மோகன் சித்தாரா, படத் தொகுப்பு—அர்ஜுபென், கதை திரைக்கதை– ரவி மேத்யூ, வசனம்- ரவிதரன் ராமசாமி, பாடல்கள்- கருணாகரன், தவா, நிர்வாகத் தயாரிப்பு– முத்துக்குமார், இயக்கம்– அனில் குமார், தயாரிப்பு– சசி நம்பீசன்.
6. ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை
DREAM THEATRES நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் சர்வானந்த், நித்யா, பிரகாஷ்ராஜ், சந்தானம் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். சேரன் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படம் இயக்குநர் சேரனின் சினிமா டூ ஹோம் திட்டத்தின் கீழ் நேரடியாகவே மக்களுக்கு டிவிடி வடிவில் வெளியிடப்படுகிறது. தியேட்டர்களில் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
7. மகா மகா
ஆஸ்திரேலியாவில் தயாரான முதல் தமிழ் திகில் படம் என்கிற அடைமொழியுடன் இந்தப் படம் ஒரு சில தியேட்டர்களில் மட்டும் வெளியாகியுள்ளது.
இதில் புதுமுகங்கள் ஹீரோ ஹீரோயினாக நடித்திருக்க உடன் நிழல்கள் ரவி, பிரகதியும் நடித்திருக்கின்றனர். எடிட்டிங் சுரேஷ் அர்ஸ், பாவலர் சிவா இசையமைத்திருக்கிறார். எழுதி, இயக்கியிருக்கிறார் மதிவாணன் சக்திவேல்.
முரட்டு கைதி (கன்னட டப்பிங் படம்)