இன்று 2015, ஜூன் 5 வெள்ளிக்கிழமையன்று 5 நேரடி தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
1. காக்கா முட்டை
பல திரைப்பட விழாக்களில் பரிசு பெற்ற திரைப்படம். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க எம்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருக்கிறார்.
2. புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
பல வெற்றிப் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளரான அ.செ.இப்ராம்ஹிம் ராவுத்தர் தனது இராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார்.
பிரபல பின்னணிப் பாடகர் கிரிஷ் இதில் ஹீரோவாக நடிக்க கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். மற்றும் ‘வெண்ணிலா கபடி குழு’ நித்தீஷ், ‘பிசாசு’ பூஜா, மதுரை ஜானகி, ஹரீஷ் மூசா, விஜய்பாபு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – செந்தில்மாறன்.ஆர், இசை – ரைஹானா சேகர், பாடல்கள் – கவிஞர் வாலி, கங்கை அமரன், எடிட்டிங் – ராஜாமுகமது, நடனம் – தினேஷ், கலை – எஸ்.எஸ்.மூர்த்தி, தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.ஈ.ராஜேந்திரன், தயாரிப்பு – இராவுத்தர் பிலிம்ஸ் A.S. இப்ராகீம் ராவுத்தர், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தம்பி செய்யது இப்ராஹிம்.
3. புத்தனின் சிரிப்பு
சக்காரியா புரொடெக்சன்ஸ் சார்பில் சுரேஷ் குமார் சக்காரியா இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இதில் மகேஷ், சுரேஷ் சக்காரியா, சமுத்திரக்கனி, மது, விவேக், செல்முருகன், தீப்பெட்டி கணேஷ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். யோகேஷ் ஒளிப்பதிவு செய்ய அஜ் அலிமிரிஜா இசையமைத்திருக்கிறார். பாடல்களை சாரதி எழுதியிருக்கிறார். விஜய் யேசுதாஸ், அனுராதா ஸ்ரீராம், மஹதி, சைந்தவி, சுசித்ரா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். விக்டர் டேவிட்சன் எழுதி இயக்கியிருக்கிறார்.
4. காத்தம்மா
இந்தப் படத்தை போகன் வில்லா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.
பிஜு கதாநாயகனாகவும், ஆதிரா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மற்றும் அசோக்ராஜ், சிவாஜி மல்லிகா, கோவை சரளா, அலி, ரவீந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இசை – ஜில்லன், பாடல்கள் – பரிதி, கலை – மில்டன், நடனம் – ரமேஷ்ரெட்டி, எடிட்டிங் – ரேய்மண்ட், திரைக்கதை, வசனம், ரூபக் – நிஸ்க், தயாரிப்பு – ராய்மலமக்கேல், ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் பிரபல ஒளிப்பதிவாளர் M.D.சுகுமார்.
5. தேகம் சுடுகுது
கேசிவி பிலிம்ஸ் சார்பில் கே.சி.விஜய் மற்றும் பி.ராஜா இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். சென்செந்தில் ஒளிப்பதிவு செய்ய. ஸ்டிவின் இசையமைத்திருக்கிறார். கே.பி.கணேஷ் எழுதி இயக்கியிருக்கிறார்.














