இன்று 2015, ஜூன் 19 வெள்ளியன்று 4 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகியிருக்கின்றன.
1.எவி
சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஜி.சதீஷ்குமார், எஸ்.அமர்நாத் இருவரும் தயாரித்திருக்கின்றனர். வடிவேலு, சதா, பிரதீப் ராவட், கிட்டி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். யுவராஜ் தயாளன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
2. அச்சாரம்
தாருண் கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஞானதேஸ் அம்பேத்கார் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராமன் – முன்னா இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகியாக பூனம் கவுர் நடித்திருக்கிறார். மற்றும் ரேகா, ராஜலட்சுமி, O.A.K.சுந்தர், ஐஸ்வர்யா தத்தா, ஞானதேஸ் அம்பேத்கார் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஆர்.கே.பிரதாப், பாடல்கள் – யுகபாரதி, இசை – ஸ்ரீகாந்த் தேவா, எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கலை – டி.சந்தானம், நடனம் – ராபர்ட், ரேகா, விமல், ஸ்டன்ட் – ஸ்பீட் சையத், தயாரிப்பு – ஞானதேஸ் அம்பேத்கார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மோகன கிருஷ்ணா
3. இயக்குநர்
ரஜத் ஹீரோவாகவும், அஷ்மிதா ஹீரோயினாகவும் நடித்திருக்கின்றனர். ரஜத் ஒளிப்பதிவு செய்ய சங்கர் கணேஷ் இசையமைத்திருக்கிறார். ரஜத் இயக்கியிருக்கிறார்.
4. இரு காதல் ஒரு கதை
ஜனா, அனு கிருஷ்ணா இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள். எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்ய, குஹா இசையமைத்திருக்கிறார். பி.பன்னீர்செல்வம் எழுதி இயக்கியிருக்கிறார்.