இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் ஜனவரி 9, 2015

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் ஜனவரி 9, 2015

இன்று 2015, ஜனவரி 9 வெள்ளிக்கிழமையன்று 2 நேரடி தமிழ்ப் படங்கள் மட்டுமே ரிலீஸாகியுள்ளன.

1. கிழக்கே உதித்த காதல்

kilakkea uthitha kaathal-poster

கவிபாரதி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.அப்துல் கறீம் தயாரித்திருக்கும் சின்ன பட்ஜெட் படம் இது. இதில் ஆர்யன், மதன், லிசா, சுமலதா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். டி.பி.ராஜசேகர் ஒளிப்திவு செய்திருக்கிறார். சி.ஆர்.ரவிகிரண் இசையமைத்திருக்கிறார். கே.முனிசங்கர் இயக்கியிருக்கிறார். 

2. வேட்டையாடு

vettaiyadu-poster

செளந்தர்யன் பிக்சர்ஸ் சார்பில் விடியல்ராஜ் தயாரித்திருக்கிறார். அறிமுக நடிகர் ராஜு, உதயதாரா பாண்டியராஜன், ரோஜா, மனோபாலா, தேவன், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். செல்வா ஒளிப்பதிவு செய்ய எஸ்.பி.எல். செல்வதாசன் இசையமைத்திருக்கிறார். கே.எஸ்.விஜயபாலன் இயக்கியிருக்கிறார்.

இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே தயாரிக்கப்பட்ட படம் இது. இதில் ஹீரோயினாக நடித்த உதயதாரா திருமணமாகி குழந்தையே பெற்றுவிட்டாராம். இப்போதுதான் இந்தப் படத்திற்கு விடிவு காலம் கிடைத்திருக்கிறது.  

Our Score