full screen background image

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – ஜனவரி 23, 2015

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – ஜனவரி 23, 2015

இன்று 23-01-2015 வெள்ளிக்கிழமையன்று 3 நேரடி தமிழ்ப் படங்கள் ரிலீஸாகியுள்ளது.

1. அரூபம்

Aroopam-Movie-Stills-22

ராணா பிக்சர்ஸ் சார்பில் டாக்டர் ஜி.யுவபாலகுமரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் தேவா ஹீரோவாக நடிக்க, நாயகிகளாக தர்ஷிதா, சஹானா இருவரும் அறிமுகமாகியுள்ளனர். மேலும் சரண், ஜெகன், ஏ.கே. ராஜேந்திரன், விஜயலட்சுமி, குள்ளமணி, தேனி முருகன், ஆகியோரும் நடித்திருக்கின்றனர். ஜி.ஜெயபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சுனில் சேவியர் இசையமைத்திருக்கிறார்.  வின்சென்ட் ஜெயராஜ் எழுதி, இயக்கியிருக்கிறார்.

2.  தொட்டால் தொடரும்

IMG_0195

FCS கிரியேஷன்ஸ் சார்பில் துவார் ஜி.சந்திரசேகர் தயாரித்திருக்கும் இப்படத்தில் தமன்குமார், அருந்ததி நடித்திருக்கின்றனர். விஜய் ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.சி.சிவன் இசையமைத்திருக்கிறார். கேபிள் சங்கர் எழுதி, இயக்கியிருக்கிறார்.

3. அப்பாவி காட்டேரி

Appavi-Katteri-Movie-Stills

கோபிகா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார்கள். மேலும், தேவன், தலைவாசல் விஜய் இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். ஜெகதீஷ் வி.விஷ்வம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். குமார் வல்சல் இசையமைத்திருக்கிறார். 

Our Score